நடிகர் விஜய்யின் மெர்சல் பட பதாகை நேற்றைய தினம் (15-10-2017) வீரம் விளைந்த பிரபாகரன் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டப்பட்டது. இதை நேற்றைய இரவே அடையாளம் தெரியாத சிலரால் கிழிக்கபட்டுள்ளது. இதை ஊரில் உள்ள மக்களே சினிமா பைத்தியங்கள் போடும் ஆட்டத்தை பொறுக்க முடியாமல் பதாகைகளை கிழித்தெறிந்தனர் என சொல்லப்படுகிறது.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.
ஊரில் உள்ள மக்கள் நமக்கு தெரிவித்த கருத்து யாதெனில்….
சினிமாக்காரர்கள் மன்னிக்கவும் – நாங்கள் பல ஆயிரத்திற்கும் மோற்பட்ட நிஜமான கதாநாயர்களை எமது மண்ணில் புதைத்துள்ளோம்.
பல்லாண்டு காலமாக காப்பாற்றப்பட்டு வந்த வல்வெட்டித்துறையின் மாண்பினை, மழைக்கு முளைத்த காளான்களாய் ஊரில் தோன்றியவர்கள், அழிக்கும் போது காலம் காலமாக ஊரின் மானத்தினை கட்டிக் காப்பாற்றி வரும் எந்த உணர்வுள்ள தமிழனும் இதை சகிக்க மாட்டான் என்றும், இதுபோல் இனி நடந்தாலும் இந்த நிலையே தொடரும் என அந்த பிரதேச வாசிகள் சிலர் தெரிவித்தனர்.
இவ்வாறு அனைத்து ஈழப் பகுதிகளிலும், சினிமா பைத்தியம் பிடித்து அலைந்து வரும் அனைவரையும் திருத்த மக்கள் அனைவரும் முன்வர வேண்டும் மற்றும் சினிமா கலாச்சாரம் ஈழ மண்ணில் காலூன்ற அனுமதிக்க முடியாது என்பதை உணர்த்தப்பட்டது.