இலங்கையின் யாழ்ப்பாணச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் 109 பேர் வெள்ளிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அடுத்த வாரம் 3 நாள் பயணமாக இந்தியா வரவிருந்தார்.
அவரது இந்திய சுற்றுப் பயணத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கபட்டிருந்த 109 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் 79 மீனவர்கள், பருத்தித்துறை நீதிமன்றத்தில் 30 மீனவர்கள் என மொத்தம் 109 மீனவர்கள் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இதனிடையே இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.இதனால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலையில் அவர் இருப்பதால் இந்திய பயணத்தை ரத்துசெய்துவிட்டதாக தகவல்கள் வெளியா கியுள்ளன.
- தி இந்து