தமிழகம் Subscribe to தமிழகம்
மேகதாது வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்த பின்னரே, மற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் : உச்சநீதிமன்றம்!!
புதுடெல்லி:மேகதாது அணை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏதேனும் உத்தரவு பிறப்பித்த பின்னரே, மற்ற வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை தொடர்பாக கட்டுமானம், சுற்றுச்சூழல் பாதிப்பு… Read more
இலங்கை கடற்படை அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல் வீசித் தாக்குதல்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் பாக் ஜலசந்தி கடலில் மீன் பிடிக்க சென்றனர். இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகுகளை வழிமறித்து மீனவர்கள் மீது கற்களை… Read more
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் மீண்டும் ஜொலிக்கும் ‘தமிழ் வாழ்க’ போர்டு-அதிமுக ஆட்சியில் முடக்கப்பட்டிருந்தது
காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக செயல்படாமல் முடக்கப்பட்ட ‘தமிழ் வாழ்க’ போர்டு மீண்டும் எரிய துவங்கி உள்ளது.காரைக்குடி நகராட்சி அலுவலகத்தின் மேல் தளத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சி காலத்தில் ‘தமிழ் வாழ்க’ போர்டு வைக்கப்பட்டது…. Read more
கவர்னர் ஆர்.என்.ரவி இன்று டில்லி பயணம்
தமிழக கவர்னராக பொறுப்பேற்ற ஆர்.என்.ரவி, முதல் முறையாக இன்று டில்லி செல்கிறார். தமிழக கவர்னராக, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரியும், நாகாலாந்து முன்னாள் கவர்னருமான ஆர்.என்.ரவி, கடந்த 18ம் தேதி பதவியேற்றார். அவரை, தமிழக டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று முன்தினம் சந்தித்து… Read more
கோயில்களில் விரைவில் திருக்குறள் வகுப்புகள்: தமிழ் வளர்ச்சித் துறை
திருக்கோயில்களில் மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்புகளை நடத்தும் முயற்சியில், தமிழ் வளர்ச்சித் துறை ஈடுபட்டுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள சைவ, வைணவக் கோயில்களில் அறநிலையத் துறை சார்பில் அறநெறி வகுப்புகள் என்ற பெயரில் தேவாரம், திருவாசகம், திவ்விய… Read more
விண்வெளி செல்வதற்கும் வாகனம் உருவாகும்; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நம்பிக்கை
”விண்வெளி செல்வதற்கும் வாகனம் இனி வரும் காலத்தில் உருவாகும்” என காந்தியை மாற்றிய தமிழ்நாடு என்ற தலைப்பில் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் நடந்த விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார். விழாவில் கதராடை மற்றும் நுாலை தியாகி லட்சுமிகாந்தன்… Read more
‘மேட் இன் இந்தியா’ போல ‘மேட் இன் தமிழ்நாடு’ என்ற குரல் ஒலிக்க வேண்டும்: ஸ்டாலின்
உலகின் முன்னணித் தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தம் நிறுவனத்தைத் தொடங்கிட வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (செப். 22) நடைபெற்ற ‘ஏற்றுமதியில் ஏற்றம் – முன்னிலையில் தமிழ்நாடு’ ஏற்றுமதி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “ஏற்றுமதியில் ஏற்றம் பெற்று இந்தியாவின்… Read more
மனநல பட்டய பயிற்சி திட்டம் துவக்கினார் சைலேந்திரபாபு
காவல் துறையில் பணிபுரியும் 1.30 லட்சம் பேர் மற்றும் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த, மூன்று லட்சம் பேருக்கு, மனநல பயிற்சி அளிக்கும் திட்டம் துவங்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி, 27. இவர், சென்னை ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக… Read more
ஏழு பேர் விடுதலை விவகாரம் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
‘தி.மு.க.,வின், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஏழுபேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை: ராஜிவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை, விடுதலை செய்ய… Read more
அக்டோபர் 2-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி: கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்..!
காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம், சுதந்திர தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை… Read more