தமிழகம் Subscribe to தமிழகம்
கேரளாவில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14 விடுமுறை அறிவிக்க கோரி கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
சென்னை: பொங்கல் விடுமுறை தொடர்பாக கேரள முதலமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் 6 மாவட்டங்களுக்கு ஜனவரி 14ம் தேதி விடுமுறை அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
“தமிழால் இணைவோம்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம்: அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் உரை
அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறையின் சார்பில் நடைபெறும் அயலகத் தமிழர் நாள் விழாவில் பங்கெடுத்து… Read more
இன்று கோவையில் சிறைச்சாலை முற்றுகைப் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று (08-01-2022) பகல் பொழுதில் அக்கட்சியில் தலைவரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தமிமுன் அன்சாரி தலைமையில், நீண்ட காலமாக ஆயுள் தண்டனை பெற்று சிறைச்சாலைகளில் வாடும் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி, அமைதியான… Read more
இலங்கை சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம், மண்டபம் மற்றும் ஜெகதாபட்டினம் மீனவர்கள் 68 பேரை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் அவர்களது விசைப்படகுகளை பறிமுதல் செய்தனர்…. Read more
சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள்
சுத்தாத்வைத சித்தாந்த பரமுக்தி (இறப்பு) எய்தினார்கள் தமிழகத்தில் அமைந்துள்ள 18 வைதிக சித்தாந்த சைவ ஆதீனங்களில் பழைமையானதான திருக்கயிலாய பரம்பரை ஸ்கந்த பரம்பரை வாமதேவ சந்தானம் சூரியனார்கோயில் ஆதீனம்20 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் சுத்தாத்வைத… Read more
நீட் தேர்வு தொடர்பாக நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்
சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (8.1.2022) நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6.1.2022 அன்று ‘நீட்’ தேர்வு தொடர்பாக சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டுவது குறித்து,… Read more
நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: நீட் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ‘எல்லார்க்கும் எல்லாம் என்ற திசை நோக்கி நகரட்டும் இந்த வையம்’ என்ற உன்னதமான குறிக்கோளைக் கொண்டதுதான் இந்த அரசு. குறிப்பாக,… Read more
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பதை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையாற்றினார். கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள் என தெரிவித்தார். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள்… Read more
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7-ம் தேதி வரை நடைபெறும்: அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 7-ம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டத்தொடர் 2 நாட்கள்… Read more
தேசியக்கொடி, சின்னங்கள், முத்திரைகளை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
தேசியக்கொடி, சின்னங்கள், முத்திரைகளை தவறாக பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதிகாரமின்றி அரசு சின்னங்களை பயன்படுத்துவோர் ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டுமென விளம்பரம் செய்ய வேண்டும் என டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…. Read more