வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
`கீழடி அகழாய்வுக் குழிகளில் நிரம்பிய தண்ணீர்’ – தொடர் மழையில் நடக்கும் 5-ம் கட்ட பணிகள்!
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழக தொல்லியல் துறையினர் சார்பாக ஐந்தாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி தொடங்கி, வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்த அகழாய்வு நிறைவு பெறுகிறது. 5-ம் கட்ட அகழாய்வுப் பணியானது… Read more
கீழடி 5-வது கட்ட அகழாய்வு 30-ம் தேதி நிறைவடைகிறது: விரைவில் 6-வது கட்ட அகழாய்வு தொடக்கம்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடை பெற்று வரும் 6-வது கட்ட அகழாய்வு பணி இம்மாதம் 30-ல் நிறைவடைகிறது. விரைவில் 6-வது கட்ட அகழாய்வு நடைபெற வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கீழடியில் மத்திய தொல்லியல் துறை 2015-ல் அகழாய்வு… Read more
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகளை படியெடுக்கும் பணிகள் தொடக்கம்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கல்வெட்டுகளை படியெடுக்கும் பணிகளை, தமிழக தொல்லியல் துறையினர் பணிகளை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சாந்தலிங்கம் கூறியதாவது: மீனாட்சியம்மன் கோயிலில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் 70-க்கும் மேல் உள்ளன. இவற்றை மத்திய அரசின் தொல்லியல்துறை… Read more
கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே எழுத்தறிவு பெற்றிருந்த தமிழர்கள்!
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படும் மதுரை நகரம், வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வசித்துவரும் வெகுசில நகரங்களில் ஒன்று. மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. பல தொல்லியல் சின்னங்கள்… Read more
இந்திய வரலாற்றையே மாற்றும் கீழடி அகழ்வாய்வு முடிவுகள்!
மதுரை அருகே உள்ள கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் தமிழகச் சங்ககாலம் என்பது, மேலும் 300 ஆண்டுகள் பழமையானது எனத் தெரியவந்திருப்பதாக தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர்… Read more
சேக்காடு ஏரியை பாதுகாத்த சோழ மன்னன்: கல்வெட்டு தகவல்!
ஆவடி அருகேயுள்ள சேக்காடு ஏரியைக் காக்க, 1,000 ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னன் எடுத்த நடவடிக்கை குறித்த கல்வெட்டு கிடைத்துள்ளது. இதில், பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் இருப்பதால், கல்வெட்டை முழுமையாக ஆய்வு செய்து, தொல்லியல் துறை, முழு தகவல்களையும், மக்களுக்கு தெரியப்படுத்த… Read more
உத்திரமேரூரில் அருகே, 1200 ஆண்டுகள் பழைமையான பல்லவர்கால சிலைகள் கண்டுபிடிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் பல்லவர், சோழர் கால கல்வெட்டுகளும், கற்சிலைகளும் ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. மேலும் இப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகளையும், கற்சிலைகளையும் உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத்தினர், தொல்லியல் துறை அதிகாரிகளின் உதவியோடு ஆவணப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில், உத்திரமேரூர் அருகே உள்ள… Read more
கீழடியில் அருங்காட்சியகம் அமையுமா? எப்போது அமையும்?
கல்வெட்டுகளும், எண்ணற்ற ஓலைச்சுவடிகளும், அரண்மனைகளும், கோயில்களும், கோட்டை கொத்தளங்களும் தமிழரின் தொன்மைக்கு ஆதாரமாக இருந்தும் மூவேந்தர், சங்க காலம் என்றெல்லாம் கற்பனையில் அடித்து விடுகிறார்கள் என்று தமிழர்களைப் பற்றி, தமிழகத்தில் இருந்து கொண்டே சிலர் ஏளனமாக பேசிக்கொண்டிருந்தார்கள். தமிழர்களை, `வேறொரு நாகரிகத்தின்… Read more
குளித்தலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான குமிழித் தூம்புக் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், வடசேரி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், 1000 ஆண்டுகளுக்கு முந்தைய குமிழித் தூம்புக் கல்வெட்டு ஒன்று மத்தியத் தொல்லியல்துறை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குளித்தலை சுற்றுவட்டாரப் பகுதியில், பாசனத்துக்குப் பயன்பட்ட ‘குமிழித் தூம்புக் (மதகு) கல்வெட்டு’ ஒன்று… Read more
கொல்லிமலையில் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு!
செம்மேடு கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கரையான் காட்டுப்பட்டியில் சாலையோரம், மண்ணில் புதையுண்ட நிலையில் எழுத்துப் பொறிப்புடன் உள்ள நடுகல் கண்டுபிடிப்பு. இக்கல்வெட்டானது பொதுக்காலம் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் நான்கு வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு என்பதை ஆய்வாளர்கள்… Read more