வரலாற்று சுவடுகள் Subscribe to வரலாற்று சுவடுகள்
கள்ளக்குறிச்சி அருகே, கி.பி 10-ம் நூற்றாண்டு பிச்சாடனர் சிற்பம் கண்டுபிடிப்பு!
சிவமூர்த்தங்கள் 64-ல் ஒன்றான பிச்சாடனார் திருக்கோலத் திருமேனி மீனாட்சியம்மன் கோயில், அண்ணாமலையார் கோயில் என மிகச்சில சிவாலயங்களில் மட்டுமே காணக்கிடைக்கிறது. தற்போது, திருக்கோவிலூர் அருகே 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிச்சாடனர் சிற்பம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் (புதிய மாவட்டம் கள்ளக்குறிச்சி)… Read more
சிவகங்கை அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
சிவகங்கை அருகே கோவானூர் கண்மாயில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த குமிழி மடைத்தூண் கல்வெட்டை கொல்லங்குடியை சேர்ந்த ஆசிரியர் பயிற்றுனரும், தொல்லியல் ஆய்வாளருமான காளிராசா கண்டுபிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சிவகங்கை ஒன்றியம் கோவானூரில் வசிக்கும் ஆசிரியர் அழகுபாண்டி அளித்த தகவலின்… Read more
தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை – 2005!
எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே! இன்று வணக்கதிக்கு உரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை… Read more
நெல்லையில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வாமனக்கல் கண்டுபிடிப்பு!
பழங்காலங்களில் கோயில்களுக்கு நிலங்களைத் தானமாக வழங்கும் பழக்கம் இருந்துள்ளது. பெருமாள் கோயில்களுக்கு, தானமாகக் கொடுக்கப்படும் நிலங்களின் எல்லையைக் குறிக்க வாமனம் உருவம் பொறிக்கப்பட்ட கல் நடப்படுவது வழக்கம். வைணவர்களின் முழுமுதற்கடவுளான விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் மூலம் மூன்றடி மண் கேட்டு மகாபலி… Read more
1,500 ஆண்டுகள் பழமையான நடுக்கற்கள் தேசூரில் கண்டுபிடிப்பு!
வந்தவாசி அருகே தேசூரில், 1,500 ஆண்டுகளுக்கு முந்தைய நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூரில், பாழடைந்த நிலையில் உள்ள ஒரு மசூதி போன்ற கட்டடமும், அதன் அருகில் ஐந்து நடுகற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை, நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டை… Read more
வந்தவாசி அருகே 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த நடுகற்கள் கண்டுபிடிப்பு!
வந்தவாசியை அடுத்த தேசூரில் கோட்டைப் பகுதியில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், முனைவர் சுதாகர் ஆகியோர் அண்மையில் அங்கு ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதியில் பாழடைந்த நிலையில் மசூதி போன்ற ஒரு கட்டடமும், அதனருகில் 5 நடுகற்களும்… Read more
இலந்தைக்கரையில் 2500 ஆண்டுகள் பழைமையான மகதநாட்டு நாணயம் கண்டுபிடிப்பு!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை அடுத்த கீழடியில், கடந்த 5 ஆண்டுகளாகத் தொல்லியல்துறை ஆய்வு நடத்தியதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன. மதுரையில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் கண்காட்சிக்காக அப்பொருள்களை வைத்துள்ளனர். இதில் சுடுமண் பானைகள்,… Read more
நாட்றம்பள்ளி அருகே கி.பி. 9-ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு!
நாட்றம்பள்ளி அருகில், கி.பி., 9ம் நூற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே, கொடையாஞ்சியில் உள்ள நிலத்தில், சலவைக்கு பயன்படுத்தி வந்த ஒரு கல் இருந்தது. இந்த கல்லில் உள்ள எழுத்துக்களை ஆய்வு செய்ததில், ஆயிரம் ஆண்டுகள்… Read more
200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு உருவம் கொடுத்து தங்கக் காசு வெளியிட்ட எல்லீஸ் துரை!
200 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து தங்கக்காசு வெளியிட்டது ஆங்கிலேய ஆட்சியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் எனத் தெரியவந்துள்ளது. இந்தியாவை ஆட்சி செய்த ஐரோப்பியர்கள் 1812-ல் தென்னிந்திய மொழிகள் மற்றும் பிற மொழிகளையும் ஆங்கிலேய நிர்வாக அதிகாரிகளுக்குப் பயிற்று… Read more