சிங்கப்பூரில் இணையவழி தமிழ் இலக்கிய நிகழ்வு!

‘வாழ்வியல் இலக்கியப் பொழில்’ அமைப்பு மாதந்தோறும் பொங்கோல் சமூக மன்றத்தில் நிகழ்வுகளை நடத்துவது வழக்கம். ஆனால் கொவிட் 19 கிருமி தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக அரசின் ஆலோசனைக்கேற்ப பொது இடங்களில் நிகழ்வு நடத்துவதைத் தவிர்த்து இணையவழி நிகழ்வுகளை நடத்துகிறது. தனது 31 ஆவது நிகழ்வினை மேத் திங்கள் 9 ஆம் தேதி பல்சுவை இலக்கிய நிகழ்வாகப் பல அறிஞர் பெருமக்களை இணைத்து மிகச் சிறப்பாக நடத்தியது.

வாழ்க நிரந்தரம் என்ற தமிழ் வணக்கப்பாடலுடன் நிகழ்வு தொடங்கியது. சிங்கப்பூர் தமிழ் மொழி பண்பாட்டுக் கழக இதழான ‘தமிழ்மணி’ – யின் துணையாசிரியர்களுள் ஒருவரான திருவாட்டி மஹாஜபீன் நிகழ்வின் முக்கியக் கூறுகளை விளக்கினார். குற்றாலக் குறவஞ்சியில் வரும் குற்றால மலை வளம் பற்றி விளக்கித் தமது தொடக்கவுரையை ஆற்றினார் ஜோஷித். சிறுவர் அங்கத்தில் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலைக் காப்பியக் கதையை ஜீவஜோதி சுவைபடச் சொன்னார். கௌஷிகா ஆத்திசூடி வரிகளை வழங்கினார். தீக்ஷிகா மழலைப் பாடலைப் பாடினார். கடுஞ்சொல் கூறுவது எவ்வகை ஆபத்தானது என்பதை மித்ரேஷ் ஒரு நீதிக் கதை மூலம் எடுத்துரைத்தார். விமல் பாரதியார் பாடல் பாட – அபிநயா கலித்தொகையில் வரும் ‘பாடறிந்து ஒழுகுதல் ‘ பாடலைப் பொருளுடன் விளக்கினார். நீலகேசியின் ‘நோயும் மருந்தும்’ பாடலையும் இவர் பாடி அசத்தினார். ஷபா ‘சிட்டுக்குருவி’ நீதிக் கதை ஒன்றைச் சொன்னார். ஜோஷிகா ‘

பிரஷிதா மூதுரையிலிருந்து சில வெண்பாக்களை எடுத்துரைத்தார். முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன் இலக்கியங்களை ஏன் படிக்க வேண்டும்? என்ற தலைப்பிலும் துளசிமணி குறள்நெறிக் கதைகள் பற்றியும் ஆசிரியர் கலைவாணி சங்க கால உணவு முறை குறித்தும் – தமிழ் மரபு விருந்தோம்பல் பற்றி ராஜேஸ்வரியும் சிறப்புரை ஆற்றினர். பேராசிரியர் மா.ராஜிக்கண்ணு பழமொழிகள் சிலவற்றின் மாறுபட்ட கருத்துக்களை விளக்கினார். ‘ கற்றறிந்தோர் ஏத்தும் கலித்தொகை ‘ என்ற தலைப்பில் திருச்சியிலிருந்து முனைவர் அமிர்தகடேஸ்வரனும் – கவிதையும் கானமும் ‘ என்ற அங்கத்தில் காரைக்குடியிலிருந்து ‘ உழவனின் பெருமை ‘ என்ற தலைப்பில் சபிதாவும கவிதை படைத்தனர். கவிஞர் சாவித்திரி சித்த மருத்துவக் குறிப்புகளை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற ஓசூர் மணிமேகலை நிகழ்வினை வெகுவாகப் பாராட்டினார். முன்னதாக அமைப்பின் தலைவர் பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி ‘ பொழில் ‘ என்ற தலைப்பில் எழுத்தாளர் ப.முத்துக் குமாரசாமியின் ‘ பைந்தமிழ்ப் பூம்பொழில் ‘ என்ற நூலின் கட்டுரைகளைச் சுட்டிக் காட்டி இலக்கியப் படைப்புக்களின் கூறுகளை எடுத்துரைத்தார். ராஜேஸ்வரி – ரமேஷ்குமார் தம்பதியினர் வரவேற்புரை ஆற்றியதுடன் நிகழ்வினையும் நெறிப்படுத்தினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>