மோடி திறந்து வைக்கும் மருத்துவமனையில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

மோடி திறந்து வைக்கும் மருத்துவமனையில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

மோடி திறந்து வைக்கும் மருத்துவமனையில் தமிழுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு பயணம் செய்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகத்திற்கு செல்லவுள்ளார்.

மோடியை வரவேற்பதற்கு மலையகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


இந்த பயணத்தின் போது இந்தியப் பிரதமர் டிக்கோயா மாவட்ட ஆதார மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார்.

ஆனால் டிக்கோயா மாவட்ட ஆதார மருத்துவமனையின் பெயர் தமிழில் பிழையாக எழுதப்பட்டுள்ளது.

டிக்கோயா மாவட்ட “ஆதார” மருத்துவமனை என்பதற்கு பதிலாக டிக்கோயா மாவட்ட “ஆநார” மருத்துவமனை என எழுதப்பட்டுள்ளது.

வரவேற்பு ஏற்பாடுகளையும், அவரவர்களுடைய விளம்பர பலகைகளிலும் கவனம் செலுத்தும் அரசியல்வாதிகள் மருத்துவமனையின் பெயரில் உள்ள பெரிய பிழையை கவனிக்கவில்லையா என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த மருத்துவமனையை திறந்து வைக்கும் போதுதான் அதிலிருக்கும் பிழைகள் இவர்களின் கண்களுக்கு தெரியுமா? அல்லது அப்போதும் தெரியாமல் போய்விடுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: