இந்தோனிஷியாவில் தமிழக வீரர் தருண் படைத்த வரலாற்றுச் சாதனை!

இந்தோனிஷியாவில் தமிழக வீரர் தருண் படைத்த வரலாற்றுச் சாதனை!

இந்தோனிஷியாவில் தமிழக வீரர் தருண் படைத்த வரலாற்றுச் சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இந்தோனிஷியாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 9-வது நாளில், 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதலில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 48.96 நொடிகளில் இரண்டாவதாக இலக்கை எட்டி வெள்ளி வென்றார் தருண் அய்யாசாமி.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

ஆசிய தடகளத்தில் முதன்முறையாக இந்தியர் ஒருவர் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் 49 விநாடிகளுக்குள் இலக்கை எட்டியுள்ளது, தருண் படைத்த குறிப்பிடத்தக்க சாதனை ஆகும். சில மாதங்களுக்கு முன் பாட்டியாலாவில் நடந்த ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தை 49.45 விநாடிகளில் கடந்து தேசிய சாதனை படைத்த தருண், தற்போது தன் சாதனையை முறியடித்துள்ளார். ஜகார்த்தாவில் முதல் 50 மீட்டர்களில் தருண் பின்தங்கியிருந்தார். கடைசி கட்டத்தில் மின்னல் வேகமெடுத்து ஓடி, ஜப்பான் வீரர் தக்தோஷி அபேயை முந்தி, வெள்ளிப் பதக்கத்தை முத்தமிட்டார்.

இந்தியா இதுவரை 7 தங்கம், 13 வெள்ளி, 20 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. மொத்தம் 40 பதக்கங்களுடன் இந்தியா 9வது இடத்தில் உள்ளது. 84 தங்கம் உட்பட 165 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தருண் அய்யாசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: