விடுதலைப் புலியினருக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையே 2009-ல் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது ராணுவத்தை விட்டு ஒடிய 2,019 சிங்களவர்களை இன்று கைது செய்துள்ளது இலங்கை அரசு.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
இராணுவ பேச்சாளர் கூறுகையில், இலங்கை இராணுவத்தினர் சுமார் 28,000 பேர் இராணுவத்தை விட்டு ஒடினர். சென்ற மாதத்திற்குள் திரும்பி வருவோருக்கு மன்னிப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தும், யாரும் வராத நிலையில் இப்பொழுது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.
இப்படி ஒடிய பலர் இறந்திருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்கு புலம்பெயந்திருக்கலாம் என கருதப்படுகிறது. ஆனாலும், இவர்களை பிடிப்பதற்கான நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிடிபட்டோர் மீது தவறு இல்லையெனில், விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு வழங்கப்பட்ட சென்ற மாதம் 23, நவம்பர் வரை சுமார் 11,350 சிங்களவர்கள் சரணடைந்துள்ளனர் என சொல்லப்படுகிறது.