பெருமை கொள் தமிழா… தீபாவளி வருகிறதல்லவா… அதற்காக சிங்கப்பூரின் தமிழ்ப்பத்திரிகையான ‘தமிழ் முரசு’ என்ன செய்தது தெரியுமா?
சிங்கப்பூரின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களை புடவை உடுத்தியவாறு நிற்கும் அழகு தேவதைகளாக்கி தீபாவளியை வரவேற்கச் செய்து ஒரு புதுமை செய்துகாட்டி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துவிட்டது.
சீன இனத்தை சேர்ந்த எம்பிக்கள் மட்டுமல்ல மலாய் இனத்ததைச் சேர்ந்தவரும் இந்த சேலை அழகு ராணிகளில் அடக்கம்.
(இவர்களுள் ஒருவராக நிற்கும் நிதி அமைச்சு, சட்ட அமைச்சு ஆகியவற்றின் மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா அவர்கள் இலங்கைத் தமிழர் வந்தவராவர்)