உலக மாஸ்டர் பேக்கர் போட்டியில் சாதனை படைத்த கனடா வாழ் இலங்கைத் தமிழன்!

உலக மாஸ்டர் பேக்கர் போட்டியில் சாதனை படைத்த கனடா வாழ் இலங்கைத் தமிழன்!

உலக மாஸ்டர் பேக்கர் போட்டியில் சாதனை படைத்த கனடா வாழ் இலங்கைத் தமிழன்!

உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் வென்றுள்ளார். ACE வெதுப்பகத்தின் சிரேஷ்ட இயக்குனர் மார்கஸ் மரியதாஸ் என்பவர் 6 சர்வதேச போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை தான் ஒரு போதும் கற்பனை செய்து பார்த்ததில்லை என மார்கஸ் மரியதாஸ் தெரிவித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


வெதுப்பக ஒலிம்பிக் போட்டியாக தான் இதனை கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டியில் பங்குபற்றுவதாக மார்கஸ் மரியதாஸ் பிரான்ஸ் தலைநகரான பரிஸிற்கு கடந்த வாரம் சென்றிருந்தார். அதற்கமைய உலகின் மிக பிரபலமான சர்வதேச போட்டியாளர்கள் 6 பேருடன் இணைந்து ஊட்டச்சத்து பாண் தாயாரிக்கும் போட்டி பிரிவில் அவர் பங்கு பற்றியுள்ளார். வட அமெரிக்கர்கள் மட்டுமே இந்த பிரிவில் பங்குபற்றியுள்ளனர். வெதுப்பகர்களின் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தை அடைவது போல, இது என்னுடைய சாதனைகளின் உச்சத்தில் இருக்கிறது, தற்போது 46 வயதான நான் எனது 25 வயதில் இருந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டி ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒரு முறையும் இடம்பெறுகின்றது. உலகின் மிகசிறந்த 18 சர்வதேச போட்டியாளர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>