இந்திய மேனாள் மத்திய அமைச்சர் மற்றும் பா.ஜ.கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான திரு. சுப்பிரமணியன் சாமிக்கு அன்மையில் அமெரிக்க தமிழ்ச் சங்கம் என்ற பெயரில் இயங்கும் ஒரு சங்கம் ‘தமிழ் ரத்தினம்’ விருது வழங்கியதுயுள்ளது.
இந்த சங்கத்தின் தலைவராக மேனாள் இந்து நாளிதழில் ஊடகவியலாளராக பணியாற்றி விட்டு, அமெரிக்க நியூ யார்க்-கில் குடிபுகுந்துள்ள திரு. பிரகாஷ் எம். சாமி இருந்து வருகிறார். இவர்தான் இந்த ‘அமெரிக்க தமிழ் சங்கம்’ என்ற அமைப்பை தலைமையேற்று நடத்தி வருவதாக தெரிகிறது.
இந்த அமைப்புத் தான் திரு. சுப்பிரமணியன் சாமிக்கு ‘தமிழ் ரத்தினம்’ விருது வழங்கியதுயுள்ளது.
ஆம், இந்த அமெரிக்க தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பு வட அமெரிக்காவில் இயங்கும் தமிழ் சங்கங்களை உள்ளடக்கிய வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையான பெட்னா அமைப்பில் இடம் பெறவில்லை என தெரிகிறது.
அத்தோடு, திரு. பிரகாஷ் எம். சாமியை பெட்னா அமைப்பிற்கு எதிராக செயல்பட்டதால், பெட்னா அமைப்பின் அன்றைய தலைவர் மருத்துவர் பழனி சுந்தரம், மார்ச் 2010 மாதமே அவரை வெளியேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இப்படி வெளியேற்றப்பட்ட திரு. பிரகாஷ் எம். சாமி, அமெரிக்க தமிழ் சங்கம் என்ற ஒரு சிறிய அமைப்பை வைத்துக் கொண்டு, தமிழகத்திலிருந்து அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் வரும் பெரிய செல்வந்தர்களை வளைத்து போடு விதமாக விருதுகளை வழங்கி வருகிறார் என்று தெரிகிறது.
இப்படிப்பட்டவர் நடத்தி வரும் இந்த சங்கத்தில் தான் திரு. சுப்பிரமணியன் சாமிக்கு ‘தமிழ் ரத்தினம்’ விருது வழங்கியுள்ளதாக பெருமை அடித்து அதை எல்லா ஊடகங்களிலும் சொல்லி வருகிறார்.