தமிழகத்தில் இருந்து திருடிச் செல்லப்பட்டு அமெரிக்க மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் உட்பட கோடி கணக்கான ரூபாய் மதிப்புள்ள 2 சிலைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மாயமாகும் சிலைகள் கடத்தி செல்லப்பட்டு அமெரிக்க மியூசியங்களில் வைக்கப்பட்டிருப்பது கடந்த 2007ல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிலையில், சோழர் ஆட்சிக் காலத்தை சேர்ந்த மிகப் பழமையான லிங்கோத்பவமூர்த்தி எனப்படும் சிவலிங்கம் தமிழகத்தில் இருந்து திருடி செல்லப்பட்டது. இந்த சிலையின் தற்போதைய மதிப்பு ரூ.1.61 கோடி.
இதேபோல், பீகார் மாநிலம் புத்தகயா அருகே கடந்த 1980-ம் ஆண்டு போதிசத்துவர் சிலை திருடு போனது. இதன் மதிப்பு ரூ.1.97 கோடி. இந்த சிலைகள் அமெரிக்காவின் வடகரோலினா பல்கலைக் கழகத்தில் உள்ள மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்தால், கடந்த 4-ம் தேதி நியூயார்க்கில் இவ்விரு சிலைகளும் இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்
உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?
இந்த சிலைகளை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சந்திப் சக்கரவர்த்தியிடம் மன்ஹாட்டன் மாகாண அட்டர்னி சைரஸ் வேன்ஸ் ஜூனியர் ஒப்படைத்தார். தற்போது வரை மன்ஹாட்ன் அட்டர்னி அலுவலகம் 150 மில்லியன் டாலர் மதிப்புள்ள பல்வேறு பழமையான திருட்டு சிலைகளை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளது.