உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார், ஒரு தமிழன்!

உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார், ஒரு தமிழன்!

உலக கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார், ஒரு தமிழன்!

2017ஆம் ஆண்டுக்கான உலக அளவில் இருக்கும் கோடீஸ்வரர்களின் பெயர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஒரே ஒரு தமிழர் இடம்பெற்றுள்ளார்.

அவர்தான் 102ஆவது இடத்தைப் பிடித்த ஹெச்.சி.எல். நிறுவனத்தின் தலைவர் சிவ நாடார். இவரது சொத்து மதிப்பு 12.3 பில்லியன் டொலர் என குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


சிவ நாடார் தனது பள்ளிப்படிப்பு முழுக்க முழுக்க தமிழிலேயே படித்தார். பள்ளிப் படிப்பு முடிந்ததும் உயர் படிப்பை மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடித்தார்.

இதன் பிறகு கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் படித்து, ஆராய்ச்சி மேற்கொண்டு, டாக்டர் பட்டமும் பெற்றார்.

டி.சி.எம். நிறுவனத்தில் மிகக் கடுமையாக வேலை பார்த்து, அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்திய அளவில் புகழ்பெற்றார். கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்தவர், சொந்தமாக பிஸினஸ் செய்ய வேண்டும் என்கிற ஆசையில் டி.சி.எம். நிறுவனத்தை விட்டு விலகினார். அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த ஐந்து பேரை தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

1983இல் ராஜீவ் காந்தி பிரதமரான பிறகு கம்ப்யூட்டர் தொடர்பான உதிரிபாகங்களை இறக்குமதி செய்யும் வகையில் சட்டதிட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்து விற்கத் தொடங்கினார். ‘பிசிபீ’ (சுறுசுறுப்பான தேனி) என்று தனது கம்ப்யூட்டருக்குப் பெயர் வைத்தார். கம்ப்யூட்டர் விற்பனை இந்தியாவில் சூடு பிடிக்கவே, 1987-ல் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் விற்பனை நூறு கோடி ரூபாயைத் தொட்டது.

1991இல் நரசிம்மராவ் பிரதமரான பிறகு தாராளமயமாக்கல் கொள்கை வரவே, வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டாகச் சேர்ந்து செயல்படத் தொடங்கும் வாய்ப்பு ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு கிடைத்தது. அமெரிக்காவின் ஹெச்.பி. நிறுவனத்துடன் இணைந்து புதிய கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் இறங்கியது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வளர்ச்சியால் ஹெச்.சி.எல். நிறுவனத்தின் வருமானம் பல ஆயிரம் கோடி ரூபாயைத் தொட்டதோடு, நாற்பது துணை நிறுவனங்கள் கொண்ட அமைப்பாகவும் மாறியது. இந்த நாற்பது நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, ஐந்து முக்கிய நிறுவனங்களாக மாற்றினார் சிவ நாடார்.

2004இல் ஐந்து நிறுவனங்களாக இருந்த நிறுவனத்தை ஹெச்.சி.எல். டெக்னாலஜீஸ், ஹெச்.சி.எல். இன்ஃபோசிஸ்டம்ஸ் என இரு பெரும் நிறுவனங்களாக மாற்றினார். இன்றைக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் இந்திய ஐ.டி. நிறுவனங்களில் முக்கியமான நிறுவனமாக இருக்கிறது.

சிவ சுப்பிரமணியம் என்ற சிவ நாடார் தமிழகத் தொழிலதிபரும், கல்வியாளரும் ஆவார். ஹச்.சி.எல் கணினி குழுமத்தின் தலைவராகவும் நிர்வாக ஆளுநராகவும் இருக்கிறார்.

ஆரம்ப காலம் :

சிவ நாடார் தூத்துக்குடியில் மூலைபொழி என்னும் கிராமத்தில் பிறந்தார். பின்பு அமெரிக்கன் கல்லூரி, மதுரை மற்றும் பூ. சா. கோ (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். ஒரு சிறிய கணினி நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் 1976ஆம் ஆண்டில் அஜய் சவுதிரி என்பவருடன் சேர்ந்து எச்.சி.எல் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று எச்.சி.எல் கணினி துறையில் பிரபலமான மென்பொருள் மற்றும் கணினி நிறுவனமாக விளங்குகிறது.

பெருமைகள் :

1996 ஆம் ஆண்டு இவர் எஸ்.எஸ்.என் என்னும் பொறியியல் கல்லூரியை சென்னையில் தொடங்கினார். 2000ஆம் ஆண்டு போர்ப்ஸ் என்னும் பத்திரிகை நிறுவனம் இவரை உலகின் முதல் 500 பணக்காரர்கள், மற்றும் முதல் 40 பணக்கார இந்தியர்கள் வரிசையில் சேர்த்தது. 2007ஆம் ஆண்டு கணக்கின்படி இவர் உலகத்தின் பணக்காரப் பட்டியலில் 217ஆம் இடத்தில் உள்ளார்.

முதலீடு :

சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய இவர் மதுரை, நெல்லை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தமது நிறுவனம் வரும் 5 ஆண்டுகளில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்து மக்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கிக் கொடுக்கும் என்று தெரிவித்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>