கலிபோர்னியா : குபெர்ட்டினோ நகர தந்தையானார் சவிதா வைத்தியநாதன்!

குபெர்ட்டினோ நகர தந்தையானார் சவிதா வைத்தியநாதன்!

குபெர்ட்டினோ நகர தந்தையானார் சவிதா வைத்தியநாதன்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள முக்கிய நகரமான குபெர்ட்டினோ நகரத்தில் தான் கம்ப்யூட்டர் தயாரிப்பில் மிகவும் பிரபலமான ‘ஆப்பிள்’ நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நகரில் வாழும் அனைவரும் கல்வியறிவில் சிறந்து விளங்கி வருவதாக ‘போர்ப்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

இந்நகரில் சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வருபவர் சவிதா வைத்தியநாதன். இந்தியப் பெண்ணான இவர், அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகிறார். எம்.பி.ஏ. பட்டதாரியான சவிதா, ஆரம்பத்தில் கணித ஆசிரியையாக இங்குள்ள பள்ளியில் பணியாற்றினார். பின்னர், தனியார் வங்கியில் பணியாற்றியதுடன் பல்வேறு சமூகச்சேவைகளிலும் ஈடுபட்டு வந்தார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


இந்நிலையில், குபெர்ட்டினோ நகர மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் அங்குள்ள மக்களின் அமோக ஆதரவை பெற்ற சவிதா, சமீபத்தில் மேயராக பதவியேற்று கொண்டார். அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சவிதாவின் தாயார் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார்.

இந்நகரின் மேயராக பதவியேற்ற முதல் இந்தியப் பெண் என்ற வகையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் வாழும் இந்தியர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>