ஐ.நா. பேரவையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி!

ஐ.நா. பேரவையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி!

‘தமிழ் கவிஞர், கணியன் பூங்குன்றனார், பற்றி, ஐ.நா., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, உரையாற்றினார்.

ஐ.நா.,வின், 74ம் ஆண்டு பொதுக் கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில், கடந்த, 24ம் தேதி துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக, 21ல், பிரதமர், மோடி அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மோடி, பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து, இருதரப்பு உறவுகள் பற்றி பேசினார். பின், நடந்த, ஐ.நா., பொதுக் கூட்டத்தில், பிரதமர் மோடி, ஹிந்தி மொழியில் பேசினார்

மேலும் அவர், இந்தியா எப்போதும் சுயநலமாக சிந்தித்ததில்லை. தமிழ் கவிஞர், கணியன் பூங்குன்றனார், பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே, ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என, பாடியுள்ளார். உலகத்தை ஒரு குடும்பமாக பார்ப்பது தான், பாரதத்தின் பண்பாடு. என, பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: