“தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்” – சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண்!

"தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்" - சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண்!

“தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்” – சாதனை படைத்த அமெரிக்க தமிழ்ப் பெண்!

ஸ்வீடனில் நடைபெற்ற உலகளவிலான பவர் லிஃப்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவை சேர்ந்த தமிழ்ப் பெண் ஆர்த்தி நிதி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

ஒருவித பளுதூக்குதல் விளையாட்டான பவர்லிஃப்ட்டிங் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரபலமானது. ஸ்குவாட், பெஞ்ச், டெட்லிப்ட் (Squat, Bench, Deadlift) ஆகிய மூன்று கட்டங்களை கொண்ட இந்த விளையாட்டில் ஒட்டுமொத்தமாக அதிக எடையை தூக்குபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.

ஐபிஎஃப் எனப்படும் சர்வதேச பவர் லிஃப்ட்டிங் கழகம், ‘வேர்ல்ட் கிளாசிக் பவர் லிஃப்ட்டிங் சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஸ்வீடனில் நடைபெற்று வரும் தொடரில், 20-22 வயத்துக்குட்பட்ட, 63 எடையுள்ள பெண்களுக்கான பிரிவில் அமெரிக்கா சார்பில் போட்டியிட்ட ஆர்த்தி நிதி வெள்ளிப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்த பவர்லிஃப்ட்டிங் போட்டியின் ஸ்குவாட் பிரிவில் உலக சாதனையோடு தங்கப் பதக்கத்தையும் இவர் வென்றுள்ளார். தான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அமெரிக்கா என்றாலும், தமிழ்நாட்டுடனான தனது உறவு எப்போதும் தொடரும் என்றும், தான் தமிழராக இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஆர்த்தி கூறுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது தாத்தாவும், பாட்டியும் இறந்துவிட்டனர். அதற்கு முன்பு வரை, ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையின்போது, ஒன்று முதல் இரண்டு மாதத்திற்கு நானும், எனது அண்ணனும் தமிழ்நாட்டிற்கு வந்து உறவினர்களுடன் நேரம் செலவிடுவோம். அப்போது, தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம், உணவு வகைகள், மொழியின் சிறப்பு போன்றவற்றை தெரிந்துகொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. நான் பள்ளியில் படித்த போது, தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை எடுத்து செல்லும்போது, என் நண்பர்கள் கேலி செய்ததுண்டு. ஆனால், நான் ஒருபோதும் அதுகுறித்து கவலைப்பட்டதில்லை. இப்போதுகூட எனது உடற்கட்டை பராமரிக்கும் உணவு வகைகளில் அவை தொடருகின்றன” என்று கூறுகிறார்.

“எனது குழந்தைகள் வளர்ந்த நேரத்தில், தமிழை சொல்லி கொடுப்பதற்கான வாய்ப்பு நியூ ஜெர்சியில் மிகவும் குறைந்தளவிலேயே இருந்தது. இருப்பினும், எங்களது வீட்டில் எப்போதுமே தமிழ் பேசுவதையே வழக்கமாக கொண்டிருப்பதால், பேச்சுத் தமிழை பொறுத்தவரை எனது குழந்தைகளுக்கு எவ்வித பிரச்சனையும் இல்லை. எனினும், தற்போது அமெரிக்கா முழுவதுமுள்ள தமிழ் கல்வி கூடங்களை பயன்படுத்தி தங்களது மொழியறிவை மேம்படுத்த எனது குழந்தைகள் விரும்புகின்றனர்” என்று கூறுகிறார் ஆர்த்தியின் தாயார் சாந்தி.

Tags: