நண்பர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க சொன்ன கனடாவின் கிருபா-வே கொரோனாவிற்கு பலி!

எமது பாசமிகு தோழன் தோழர் கிருபா எ. ரூபன்- வின் துயர் தோய்ந்த செய்தியால் நாம் மீளா துயரடைந்துள்ளோம். “கழகம்” எனும் பாசறையில் பழகிய நட்பு புலம் பெயர்ந்த போதும் குறையாத பாசத்துடன் தொடர்ந்து வந்த நிலையில் காலனவன் உன்னுயிரை காவு கொண்டான் தோழனே.

இவ்வளவு சீக்கிரம் எம்மை விட்டு செல்ல போகிறாய் என்று அறிந்ததாலோ என்னவோ, நீ நேசித்த தோழர்களின் சுகத்தை எல்லாம் கேட்டு விட்டு பாசமிகு தோழர்களை தொலைபேசியில் அழைத்து கொடிய கொரோனா ஆபத்து நிறைந்தது, கவனமாய் இருங்கள் என்றாய்.

பாசறை கால பசுமையான நினைவுகளை சுமந்து ஆண்டுக்கொரு தடவை “நண்பர்கள் இரவு” “கோடையில் ஒர் சந்திப்பு” என்று உண்டு மகிழ்ந்து கூடி குலாவி தோழமைக்கு வலுச் சேர்த்தாய் தோழனே.

இந்த ஆண்டு அந்த சந்திப்பு நடக்குமா இல்லையா என்று கேட்டாயே, “ரூபா”. ஏன் இவ்வளவு விரைவாக செல்ல போகிறேன், என அறிந்து தான் இதனை கேட்டாயோ, தோழரே.

என்றும் உனது தோழமையுடன் கூடிய பாசம் என்றென்றும் எங்கள் நினைவுகளுடன் – அமைதி கொள்ளுங்கள் உங்கள் நினைவுகளை சுமந்து கொண்டு உங்களுக்கு இறுதி விடை கொடுக்கின்றோம் எம் இனிய தோழரே.

– செல்வம் கந்தா, கனடா

அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>