அதிபர் பதவிக்கு ஜோ பைடன் சரியில்லை: தமிழ் பெண் கமலா ஹாரிஸ் பக்கம் கவனத்தை திருப்பிய அமெரிக்கர்கள்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மக்கள் கொடுத்து வந்த ஆதரவு வேகமாக சரிந்து வரும் நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்று குடியரசு கட்சியை சேர்ந்த சிலரே கருத்து கூற தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக மக்கள் கருத்து கணிப்பும் வெளியாகி உள்ளது.

அதன்படி அதிபர் ஜோ பைடனுக்கான மக்கள் ஆதரவு கடந்த கருத்து கணிப்பில் 53 ஆக இருந்தது. ஆனால் இந்த முறை அவருக்கான ஆதரவு 7 சதவிகிதம் குறைந்துள்ளது. அவருக்கு தற்போது மக்கள் ஆதரவு 46 சதவிகிதம் மட்டுமே உள்ளது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதும். அங்கு தாலிபான்கள் வெற்றி பெற்றதும் இந்த ஆதரவு குறைய காரணமாக பார்க்கப்படுகிறது. 54 சதவிகிதம் பேர் ஜோ பைடனுக்கு எதிராக கருத்து தெரிவித்து உள்ளனர்.

முக்கியமாக ஆப்கான் படைகள் வலிமையானது என்று ஜோ பைடன் தவறாக கருத்து தெரிவித்து விட்டார். அவர் தனது அரசியல் கணிப்பில் தோல்வி அடைந்து விட்டார். உளவுத்துறையை சரியாக பயன்படுத்தவில்லை என்று கணிப்பில் குறிப்பிட்டு உள்ளனர்

மாறாக தமிழ் பெண்ணான துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கான ஆதரவு 43 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. அதிபர் ஜோ பைடனை விட இவருக்கான ஆதரவு 3 சதவிகிதம் குறைவாக இருந்தாலும் தனிப்பட்ட வகையில் இவரை ஆதரிக்கும் மக்கள் சதவிகிதம் கடந்த சில மாதங்களாக உயர தொடங்கி உள்ளது. இவரின் கடுமையான ராணுவ கொள்கைகள், ஆயுத ஆதரவு காரணமாக இப்படி இவருக்கான செல்வாக்கு உயர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முக்கியமாக தமிழ் பெண்ணான துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபராக பதவி ஏற்றால் நன்றாக இருக்கும் என்று அமெரிக்கர்கள் சிலர் கருத தொடங்கி உள்ளனர். இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை. ஜோ பைடன் பதவி விலகுவது எல்லாம் வாய்ப்பே இல்லாத விஷயம். ஆனாலும் வேறு ஏதாவது பெரிய பிரச்சனை ஏற்படும் சமயத்திலோ அல்லது அடுத்த தேர்தலிலோ ஜோ பைடனுக்கு பதிலாக தமிழ் பெண்ணான கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்புகள் ஏற்படும். ஜோ பைடன் பதவிக்கு வந்த போதே கமலா ஹாரிஸ் விரைவில் பதவி ஏற்க வாய்ப்பு உள்ளதாக பேச்சுக்கள் அடிப்பட்டன. 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:

?>