திராவிடம் கால நிலைக்கேற்ப தன்னைத் தானே மாற்றிக் கொள்ளும் தன்மையுடன், தனது இருப்பை தக்க வைக்க அதிகாரம் கிடைக்கும் பட்சத்தில், எது வேண்டுமென்றாலும் செய்யும் என்பதற்கான எடுத்துக் காட்டுத் தான் இந்த தமிழ்நாடு நாள் விழா குறித்த முதல்வரின் செயற்பாடு காட்டுகிறது.
மொழிவழிக்காக, எந்தவொரு தியாகமும், மாறாக அன்று எதிராக செயற்பட்ட திராவிடம், இன்று திராவிடம் பெயர் வைத்த நாளை, பிறந்த நாளாக கொண்டாட துணிந்திருப்பதை ஏற்க இயலாது . இந்த செய்கையை / அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
கொண்டாடப்பட வேண்டிய அனைத்திற்கு தமிழ் விழாக்களையும், நாம் தனித் தனியே விழா எடுக்கலாம். அதைவிடுத்து தான் தோன்றிதனமாக, தேய்ந்து வரும் திராவிடத்தை காக்க எடுக்கபட்ட நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும்.
இதுகுறித்து விரிவான அறிக்கை விரைவில் எமது உலகத் தமிழர் பேரவை வெளியிடும்.
அக்னி சுப்ரமணியம்
உலகத் தமிழர் பேரவை.
www.worldtamilforum.com