யாரை நம்புவது? தன்னார்வலர் என்பதா அல்லது திட்டமிட்ட கொரோனா தொற்று கடத்தியா? காவல்துறையினருக்கு ஒரு வாரமாக உணவு விநியோகம் செய்தவருக்கு கொரோனா!

கோவை வடமதுரை கோத்தாரி லே அவுட் பகுதியை சேர்ந்த 61 வயது தன்னார்வலர் ஒருவர் கடந்த ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு விநியோகம் செய்து வந்துள்ளார். அந்த நபர் அரசியல் கட்சியில் தொடர்புடையவராக இருந்ததால், அதனை நம்பி துடியலூர் காவல்துறையினரோடு இணைந்து வாலன்டியராக போக்குவரத்தை சீரமைப்பது உட்பட பல்வேறு பணிகளை செய்து வர அனுமதித்துள்ளனர்.

இஸ்லாமியர்கள் டெல்லி நிஜாமுதீன் என்ற பகுதியில் தப்லீக் ஜமாத் மாநாடு நடத்தி, இந்தியாவின் பல இடங்களுக்கு கொரோனா தொற்றை தாங்களை அறியாமலேயே கொண்டு சென்றதாக சொல்லப்படுகிறது. இப்படி தன்னார்வலராக பணி செய்த அந்த நபர் கடந்த மார்ச் 23 ம் தேதி இரவு டெல்லியில் மாநாடு முடித்து விட்டு விமானம் மூலம் கோவை வந்துள்ளார். தமிழக சுகாதாரத் துறையின் கட்டளைப்படி, மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் தங்களை மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்திக் கொண்டு, அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆனால், அப்படிப்பட்ட இந்த மேலே குறிப்பிட்ட நபருக்கு மருத்துவ பரிசோதனை இரு முறை ஏற்கெனவே செய்யப்பட்ட போது, நெகட்டிவ் என வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இப்படியான நிலையில் அவர் ஒரு வாரமாக துடியலூர் காவல் துறையினருக்கு உணவு அளித்து வந்த காவல் நிலையத்தில் பணியாற்றிய 40 -க்கு மேற்பட்ட காவலர்கள்  மற்றும் அந்த நபருடன் தொடர்பில் இருந்த 120 நபர்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்று, இன்று காலை முதல் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதில் அந்நபர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டதும், அவர் ஏற்கெனவே இரு முறை சோதனை செய்யப்பட்டதையும் காவலர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. அந்த நபரும் காவலர்களிடம் இவைகளை மறைந்ததாகவே தெரிகிறது. இப்படி மறைப்பதை என்னவென்று சொல்வது. இனி உலகில் யாரை நம்புவது என்றே கேள்வி எழுகிறது?

#Covid19 #CoronaTamils

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: