விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கனடா, அமெரிக்காவுக்கு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைப்பு!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கனடா, அமெரிக்காவுக்கு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைப்பு!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் கனடா, அமெரிக்காவுக்கு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைப்பு!

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் சென்னையில் இருந்து கனடா மற்றும் அமெரிக்காவுக்கு திருவள்ளுவர் சிலைகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் `உலகை தமிழால் உயர்த்துவோம்’ என்ற நோக்கத்தில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், உலக நாடுகளிலும் 31 திருவள்ளுவர் சிலைகள் இலவசமாக நிறுவப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக கனடா நாட்டில் ஸ்காபரே சைவ மண்டபத்திலும், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் மிடில் வில்லேஜ் பகுதியில் உள்ள தமிழ்க் கோயில் வளாகத்திலும் திருவள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட உள்ளன. அந்த சிலைகள், அடையா றில் உள்ள எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வழியனுப்பும் விழா நேற்று நடைபெற்றது. இதில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்க நிறுவனர் வி.ஜி.சந்தோசம் பங்கேற்று திருவள்ளுவர் சிலைகளை வழியனுப்பி வைத்தார்.

முன்னதாக அவர் பேசியதாவது:

எங்கள் நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் தமிழ் திருவிழாக்களை நடத்துவோம். ஒரே இடத்தில் ஆயிரம் குழந்தைகளுக்கு பாரதியார் வேடம் அணிவித்து விழா எடுப்போம். அதன் தொடர்ச்சி யாக உலகம் முழுவதும் தமிழை பரப்ப, உலகத் தமிழ்ச் சங்கத்தை தொடங்கினோம். தொழில் மூலமாக உலகம் முழுவதும் தொடர்பு இருந்தது தமிழை பரப்புவதற்கு உதவியாக இருந்தது. அதற்கு பிடிமானமாக திருவள்ளுவர் சிலையை வைக்க நடவடிக்கை எடுத்தோம்.

முதன் முதலில் ரிஷிகேஷில் திருவள்ளுவர் சிலையை வைத்தோம். அதன்பிறகு மலேசியா, தென் ஆப்பிரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இலங்கை ஆகிய நாடுகளிலும் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. சண்டிகரில் திருவள்ளுவர் சிலை நிறுவ கேட்டுள்ளனர். அதற்கு விரைவில் அளிக்க இருக்கிறேன். யாருக்கு சிலை வேண்டுமானாலும் இந்த அமைப்பு இலவசமாக வழங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குர் கோ.விசயராகவன், இந்திய ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர், அமெரிக்க தமிழ்ச்சங்கத் தலைவர் பிரகாஷ் சாமி, எம்ஜிஆர்- ஜானகி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் அபிதா சபாபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  • தி இந்து

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வு... கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்: ஆய்வறிக்கைகள் வரவேற்பு! கர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்ப...
திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கே... திருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு! பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரில் ஜன.28-ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் ந...
தைப் பொங்கலை அமெரிக்க அரசு விழாவாக சிறப்பாக கொண்டா... தைப் பொங்கலை அமெரிக்க அரசு விழாவாக சிறப்பாக கொண்டாட தீர்மானித்துள்ளளது, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம்! அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில்...
தமிழக விவசாயிகளின் உயிர்காக்க ‘மொய் விருந்த... தமிழக விவசாயிகளின் உயிர்காக்க 'மொய் விருந்து' வைத்து நிதி திரட்டி அசத்திய அமெரிக்கா வாழ் தமிழர்கள்! புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் மொய் விரு...
Tags: 
%d bloggers like this: