ரயில் டிக்கெட்டுகளை தமிழிலும் அச்சடித்து வழங்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை!

ரயில் டிக்கெட்டுகளை தமிழிலும் அச்சடித்து வழங்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை!

ரயில் டிக்கெட்டுகளை தமிழிலும் அச்சடித்து வழங்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை!

ரயில் டிக்கெட்டுகளை தமிழிலும் அச்சடித்து வழங்க, தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில், சில ஆண்டுகளுக்கு முன், புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகள், தமிழில் அச்சடித்து வழங்கப்பட்டன. பின், நிறுத்தப்பட்டு, ஆங்கிலத்திலும், இந்தியிலும் டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், ஆங்கிலம் தெரியாதவர்கள், ஊர் பெயர் தெரியாமல், திணறும் நிலை உள்ளது.

அதனால், மாநில மொழிகளிலும், ரயில் டிக்கெட்டுகளை அச்சிட்டு வழங்க, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.தெற்கு ரயில்வேயில், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில், ரயில் டிக்கெட் வழங்க, ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஆங்கிலத்தில் உள்ள பெயர்களை, தமிழிலும், மலையாளத்திலும் மொழி பெயர்க்கும் போது, பல ஊர்களின் பெயர்கள் உச்சரிப்பில் குளறுபடி ஏற்பட்டதுடன், அர்த்தமும் வேறாகும் நிலை இருந்தது. அதனால், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் புலமை பெற்றவர்கள் இடம் பெற்ற, நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, பிழை திருத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக, பிரத்யேக, ‘சாப்ட்வேர்’ கட்டமைப்பும் உருவாக்கப் பட்டுள்ளது. முதல் கட்டமாக, எக்ஸ்பிரஸ் ரயில்களில், முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் மற்றும், சென்னையில், புறநகர் மின்சார ரயில்களுக்கான டிக்கெட்டுகளை, தமிழில் அச்சிட்டு வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழ் புத்தாண்டான, ஏப்., 14 முதல், தமிழில் டிக்கெட் வழங்கும் பணி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

திருப்புல்லாணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான... திருப்புல்லாணி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பழைமையான வெளிநாட்டு நாணயங்கள்! ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ...
ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியி... ஓலைச்சுவடியில் மொய் எழுதும் வழக்கம்: தமிழக மாணவியின் கள ஆய்வில் கண்டுபிடிப்பு! இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் தங்கள் பக...
பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர்!... பைந்தமிழ் வளர்த்த பரிதிமாற் கலைஞர்! ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ‘சூரிய நாராயண சாஸ்திரி’ எனும் வடமொழிப் பெயர் நீக்கி ‘பரிமாற்கலைஞர்’ என்று தனித் தமிழில...
வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எ... வழக்கறிஞர், நீதிபதி, நாடக ஆசிரியர், நாடக நடிகர், எழுத்தாளர் என்ற பன்முகத் திறன் வாய்ந்தவர் பம்மல் சம்பந்த முதலியார்! சென்னையில் பம்மல் விஜயரங்க முதல...
Tags: