மதிப்பை இழந்து வரும் பாரம்பரிய சின்னங்கள் – யுனெஸ்கோ பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம்!

மதிப்பை இழந்து வரும் பாரம்பரிய சின்னங்கள் - யுனெஸ்கோ பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம்!

மதிப்பை இழந்து வரும் பாரம்பரிய சின்னங்கள் – யுனெஸ்கோ பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம்!

‘கல்வெட்டுகள் சிதைப்பு, திருப்பணிக்காக செய்யப்படும் தவறான புனரமைப்புகள், ஆக்கிரமிப்புகள், நகர மயமாதல் போன்றவைகளால், நம் நாட்டு பொக்கிஷங்களின் பாரம்பரிய தன்மை மறைந்து வருகிறது. அதனால், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பான, ‘யுனெஸ்கோ’வின் அங்கீகாரம் பெற முடியவில்லை’ என, தொல்லியல் ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

‘உலக பாரம்பரிய வாரம்’ நவ., 19 முதல், 25ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்தச் சூழலில், நம்நாட்டில், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட, 24 உலக பாரம்பரிய சின்னங்களும், ஆறு இயற்கை பாரம்பரிய சின்னங்களும் உள்ளன. அவற்றில், சில பாரம்பரிய சின்னங்கள், பட்டியலில் இருந்து விடுபடும் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து, இந்திய தொல்லியல் துறையின், தென்னிந்திய ஆலய ஆய்வுப் பிரிவு கண்காணிப்பாளர் மகேஸ்வரி கூறியதாவது:

புராதனம் அழியாமல்

மதிப்பை இழந்து வரும் பாரம்பரிய சின்னங்கள் - யுனெஸ்கோ பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம்!

மதிப்பை இழந்து வரும் பாரம்பரிய சின்னங்கள் – யுனெஸ்கோ பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம்!

பழங்கால நகரம், கட்டடம், கோட்டை, கலை கூடங்கள், வாழ்வியலோடு தொடர்புடைய இடங்கள், காடு, மலை உள்ளிட்ட, இயற்கை வளங்கள் போன்றவற்றின் புராதனம் அழியாமல் இருந்தால், அவற்றை, உலக பாரம்பரிய சின்னங்களாக, யுனெஸ்கோ அங்கீகரிக்கிறது.நம் நாடு மிக பழமையான கலாசாரம், பண்பாடு உடையது. அதிலும், தமிழகத்தில் தான், பழமையான கோவில்கள் அதிகம். நம் நாட்டை விட, சிறிய, நவீன நாகரிக ஆதிக்கமுள்ள நாடுகளிலும், உலக பாரம்பரிய சின்னங்கள், அதிக அளவில் உள்ளன.

தமிழகத்தில், பல்லவர்களின் மாமல்லபுரம், சோழர்களின்தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோவில், தாராசுரம் அய்ராவதேஸ்வரர் கோவில்களை, உலக பாரம்பரிய சின்னங்களாக, யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. அத்துடன், இயற்கை பாரம்பரிய சின்னமாக, மேற்கு தொடர்ச்சி மலை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.மாமல்லபுரத்தில், ‘கோர் ஜோன்’ என்ற பாதுகாக்கப்பட்ட பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையின், வெள்ளையன் குட்டை அருகே, பொதுப்பணி துறை மேம்பாலம் கட்டுகிறது. தஞ்சை பெரிய கோவில் அருகிலும், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. அக்கோவிலின் எதிரே, கனரக வாகனங்கள் செல்கின்றன.

பாரம்பரிய சின்னங்களை பாதிக்காத வகையில், கர்நாடக மாநிலம், ஹம்பியில், கனரக வாகனங்களுக்காக, தனி சாலை அமைக்கப்பட்டுள்ளதை, நாம் கவனிக்க வேண்டும். அடுத்ததாக, தமிழகத்தின், இயற்கை பாரம்பரிய சின்னமான, மேற்கு தொடர்ச்சி மலையிலும், சுற்றுச்சூழல் மாசுபடுத்தப்படுகிறது.நம்நாட்டில்,பாரம்பரிய தன்மை உடைய சின்னங்கள் அதிகம் உள்ளன. ஆனால், திருடப்படும் சிலைகள், சிதைக்கப்படும் கல்வெட்டுகள், திருப்பணிக்காக செய்யப்படும் தவறான புனரமைப்புகள், ஆக்கிரமிப்புகள், நகர மயமாதல், தொழில் வளர்ச்சி போன்றவைகளால், அவற்றின் பாரம்பரிய தன்மை மறைந்து போகிறது.

இதே நிலை நீடித்தால், உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பல சின்னங்கள், நீக்கப்படும் சூழல் உள்ளது. பழமையான கட்டடங்களை, அவற்றின் தன்மை மாறாமல் பாதுகாக்க வேண்டும். அவற்றுக்கு காற்று, ஒலி மாசுவால் பாதிப்பு ஏற்படக்கூடாது; அவற்றின் அருகே, அதிர்வு உண்டாக்கும் செயல்கள் கூடாது.

சிறப்பை உணர வேண்டும்

பாரம்பரிய சின்னங்களை விட உயரமாகவோ, அதற்கு தொடர்பில்லாத கட்டமைப்பிலோ, வண்ணங்களுடனோ, கட்டடங்கள் கட்டக்கூடாது. சுற்றுலா பயணிகளுக்கு சாதகமான சூழலை, பஸ் நிலையம், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றில் ஏற்படுத்த வேண்டும். தொல்லியல், சுற்றுலா மற்றும் அறநிலையத்துறையினர் மட்டுமின்றி, வியாபாரிகள், வாகன ஓட்டிகள், மாணவர்களும் பாரம்பரிய சின்னங்களின் சிறப்பை உணர வேண்டும். உலக பாரம்பரிய சின்னங்கள் அதிகம் உள்ள நாட்டிற்கு, சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும். அதனால், உள்ளூர் வணிகம் சிறக்கும்; உலகளவில் பெருமை உயரும். இவ்வாறு அவர் கூறினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: