கையடக்க செயற்கைக்கோள் உருவாக்கிய கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம்! முதல்வர் அறிவிப்பு!

கையடக்க செயற்கைக்கோள் கண்டுபிடித்த கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம்! முதல்வர் அறிவிப்பு!

கையடக்க செயற்கைக்கோள் கண்டுபிடித்த கரூர் மாணவருக்கு ரூ.10 லட்சம்! முதல்வர் அறிவிப்பு!

64 கிராம் எடைகொண்ட சிறிய செயற்கைகோளை வடிவமைத்த கரூர் மாணவர் ரிஃபாத் ஷாரூக்கிற்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த மாணவர் முகமது ரிஃபாத் ஷாரூக். கிரசென்ட் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 முடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 750 என்றாலும் அவர் செய்த சாதனை அளப்பரியது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


நாசா நடத்திய போட்டியில் கலந்து கொண்ட இவர் சிறிய வடிவிலான செயற்கைக்கோளை வடிமைத்துள்ளார். 3டி ப்ரிண்டிங் மூலம் புதிய தொழில் நுட்பத்தில் இதனை உருவாக்கியுள்ளார். 240 நிமிடங்கள் மட்டுமே விண்ணில் இருக்கும் இந்த செயற்கைக் கோள் முப்பரிமாண கார்பன் ஃபைபரின் இயக்கத்தை விளக்கும் பதிவுகளைச் செய்யும். இம்மாணவனின் அறிவியல் திறன் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் இவர் வடிவமைத்த செயற்கைகோளை நேற்று அதிகாலை நாசா விண்ணில் செலுத்தியது. இதனால் அந்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இவரது சாதனைக்கு தமிழக சட்டசபையில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியதாவது:

“கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் உள்ள, கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், முகமது ஷாருக் ரிபாத் ராஜ், கையடக்க செயற்கைக்கோள் ஒன்றை உருவாக்கி உள்ளார். இந்த செயற்கைக்கோளுக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக, ‘கலாம் சாட்’ என, பெயரிடப்பட்டு, ஜூன், 22 மாலை, 3:30 மணிக்கு, அமெரிக்காவில் உள்ள, ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து, வெற்றிகராக விண்ணில் ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோள், 64 கிராம் எடை உடையது; ஒரு லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனையை படைத்து, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடி தந்துள்ள, முகமது ஷாருக் ரிபாத் ராஜுக்கு, இந்த சபை சார்பிலும், என் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும், வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதோடு, 57 நாடுகளைச் சேர்ந்த, 8,000 மாணவர்களை, ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம், தேர்வுக்காக அழைத்திருந்தது; அதில், இவரும் ஒருவர். அவருக்கு நிதி உதவி செய்ய, அரசு பரிசீலிக்கும்”. இவ்வாறு அமைச்சர் கூறியதும், எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி, பாராட்டு தெரிவித்தனர்.

எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டா லினும் மாணவர் ஷாரூக்கை பாராட்டி பேசினார்.

அமைச்சர் செங்கோட்டையன்: “அந்த மாணவருக்கு, முதல்வர் வந்ததும், உதவித் தொகை வழங்கப்படும்”. என கூறினார்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்: எங்கள் மாவட்டத்தை சேர்ந்த மாணவருக்கு, பாராட்டு தெரிவித்து, கட்சி சார்பில், ஒரு லட்சம் ரூபாய், நிதியுதவி வழங்கி உள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்நிலையில் இன்று அந்த மாணவருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மாணவர் படிப்பில் சுமார் என்றாலும் அவரது படைப்புகளோ உலக விஞ்ஞானிகளையே அசர வைத்துவிட்டது. கலாம் கனவுதான் காணச் சொன்னார்.. ரிஃபாத் அந்தக் கனவை மெய்ப்பித்து விட்டார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

சர்வதேச ‘ஸ்கேட்டிங்’கில் தங்கம் வென்ற ... சர்வதேச 'ஸ்கேட்டிங்'கில் தங்கம் வென்ற மூன்றரை வயது சிறுமி சாதனை! சர்வதேச, 'ஸ்கேட்டிங்' போட்டியில் தங்கம் வென்ற, மூன்றரை வயது சேலம் சிறுமிக்கு, பல்வே...
முகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுக... முகில்களைக் கிழித்து விண்ணைத் தொட்டது ‘அகரன்’ ஏவுகணை! ஈழத் தமிழர் ர.ரணேந்திரன் சாதனை! ஈழத் தமிழரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ‘அகரன்’ ஏவுகணை வ...
மஞ்சள் காமாலைக்கு தீர்வு… ஃபோர்ப்ஸ் சாதனைப்... மஞ்சள் காமாலைக்கு தீர்வு... ஃபோர்ப்ஸ் சாதனைப் பட்டியலில் இரு தமிழர்கள்! அண்மையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட ‛அதிசிறந்த இளம் சாதனையாளர்கள்’ பட்டியலில் விவ...
பாராலிம்பிக்… உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ... பாரா ஒலிம்பிக்... உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார்! மாரியப்பன் காட்டில் பரிசு மழை! பிரேசில், ரியோ நகரில் நடைபெறும் ...
Tags: 
%d bloggers like this: