ரூ.54 கோடியில் நவீனமாகிறது திருப்பூர் பழைய பேருந்து நிலையம்!

ரூ.54 கோடியில் நவீனமாகிறது திருப்பூர் பழைய பேருந்து நிலையம்!

திருப்பூர் பழைய பேருந்து நிலையம், மாநகரின் பிரதான போக்குவரத்து மையமாக உள்ளது. நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ‘சீர்மிகு நகரம்’ திட்டத்தின் கீழ், பழைய பேருந்து நிலையம் ரூ.36.5 கோடி மதிப்பில் உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்து கட்டப்படுகிறது.

மேலும் ரூ.18.1 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்தும் இடமும் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா பேருந்து நிலைய வளாகத்தில் 23-08-2019 அன்று நடைபெற்றது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது, ‘புதிதாக அமையவுள்ள திருப்பூர் பழைய பேருந்து நிலையம் தரைத் தளம், முதல் தளம் என இரு தளங்களுடன் அமைகிறது. பிறைநிலா வடிவில் வளைவாக அமைக்கப்படும் வணிக வளாகத்தை பேருந்துகள் சுற்றிச் செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது. மின் விளக்கு வசதிகள், கழிப்பறைகள், ஓய்வு இருக்கைகள், பயணிகளுக்கான பொருட்கள் பாதுகாப்பு அறைகள், வாகன நிறுத்துமிடம், நவீன வடிவமைப்பில் நுழைவுவாயில், கண்கவர் அலங்கார விளக்குகளும் ஏற்படுத்தப்படுகின்றன. பேருந்து கள் வருகை அறிவிப்பு, சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு, பணிகள் தொடங்கப்படவுள்ளன’ என்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: