72 வயது முதியவரின் ‘திருக்குறள் நெசவு’ புதிய முயற்சி!

72 வயது முதியவரின் 'திருக்குறள் நெசவு' புதிய முயற்சி!

72 வயது முதியவரின் ‘திருக்குறள் நெசவு’ புதிய முயற்சி!

கரூரில் உள்ள கைத்தறி நெசவாளர் சின்னசாமி திருக்குறளில் உள் 1330 குறள்களையும் கைத்தறி துணியில் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்தவர் கைத்தறி நெசவாளர் சின்னசாமி. 72 வயதாகும் சின்னசாமி கைத்தறி கொழிலில் சுமார் 58 வயது அனுபவமுடையர். தற்போது புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு்ள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


திருக்குறளில் உள்ள 1330 குறள்களையும் கைத்தறியில் வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு அதிகாரத்தில் உள்ள 10 குறட்பாக்களை துணியில் நெய்து வருகிறார்.

முதலில் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் 10 குறள்களையும், பிறகு வான் சிறப்பு அதிகாரத்தில் உள்ள 10 குறள்களையும் நெய்துவிட்டு இப்போது 3வது அதிகாரத்தில் உள்ள குறள்களை நெய்து வருகிறார்.துணியில் நெய்யும் முன்பு கிராப் பேப்பரில் குறளை புள்ளி வடிவில் எழுதி வைத்துக்கொண்டு அதை வைத்து கைத்தறியில் நெய்து வருகிறார். 1330 குறள்களையும் கைத்தறி நெய்து அரசிடம் ஒப்படைத்து அதை அரசே ஒரே இடத்தில் காட்சிப்படுத்தி அனைவரும் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.திருக்குறள் மட்டுமல்லாது, தமிழக அரசின் இலட்சிணை, மகாத்மா, காந்தி, சுவாமி திருவுருவங்கள் என கைத்தறியில் இவர் நெய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்!... தமிழகத்தை நீர்வளமிக்க நாடாக மாற்றுவோம்! காவிரி நீர் பிரச்னை தலை விரித்தாடுகிறது... ஒவ்வொரு ஆட்சியாளர்களும், 'உங்க கட்சி தான் காரணம்!' என, ஒருவரை ஒரு...
இனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும், த... இனிவரும் இருநூறாண்டுகளில் சிங்கப்பூரில் தமிழும், தமிழர்களும்! பிரிட்டிஷ்காரர்கள் சிங்கப்பூரில் வந்து இறங்கி, சிறு மீன்பிடிக் கிராமமாக இருந்த இந்தக் ...
தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்து அசத்திய அரசுப்... தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் படித்து அசத்திய அரசுப் பள்ளி மாணவிகள்! சென்னை அகிம்சை நடை, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம், திருப்புல்லாணி தொன்மைப்...
இலங்கை அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா?... இலங்கை அமைச்சரவை மாற்றம் “விஞ்ஞான” ரீதியிலானதா? இலங்கையில் நடந்துள்ள அமைச்சரவை மாற்றத்தின் மூலம் 18 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும், 8 ப...
Tags: