நக்கீரன் கோபாலை கைது செய்ய காரணமாக இருந்த அட்டைப் படக் கட்டுரை!

நக்கீரன் கோபாலை கைது செய்ய காரணமாக இருந்த அட்டைப் படக் கட்டுரை!

நக்கீரன் கோபாலை கைது செய்ய காரணமாக இருந்த அட்டைப் படக் கட்டுரை!

ஆளுநரை விமர்சித்து செய்தி வெளியிட்ட விவகாரம் தொடர்பாக பத்திரிக்கை ஆசிரியர் ’நக்கீரன்’ கோபாலை சென்னை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ஆளுநர் அலுவலகத்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையருக்கு அனுப்பப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு திருவல்லிக்கேணி காவல் நிலையம் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில் நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை விமர்சித்து ’நக்கீரன்’ பத்திரிக்கையில் வெளிட்ட செய்தி தொடர்பாக, இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

செங்கோட்டையன் அளித்த புகாரில் ஏப்ரல் 20-22-ம் இதழில் ‘பூனைக்கு மணிகட்டிய நக்கீரன்! பொறியில் சிக்கிய ஆளுநர்! சிறையில் நிர்மலாவுக்கு ஆபத்து’ என்ற தலைப்பில் ஆளுநர் பன்வாரிலால் படத்துடன் அந்த இதழ் வெளியாகியுள்ளது. அந்த அட்டைப் படத்துடன் புகார் மனுவை இணைத்துக் காவல் ஆணையருக்கு அனுப்பியுள்ளது ஆளுநர் மாளிகை. இந்தப் புகாரை அடிப்படையாக வைத்துத்தான் நக்கீரன் கோபால் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தக் கட்டுரை வெளியாகி ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இப்போது கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை முன்னா... விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய இலங்கை முன்னாள் பெண் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை! விடுதலைப் புலிகள் திரும்பி ...
சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்... சிறிசேன, ராஜபக்ச மீது கொலை முயற்சி: இலங்கையில் இந்தியர் கைது! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ...
இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள்... இலங்கையில் போராட்டம் நடத்திய தமிழ் அரசியல் கைதிகள் நான்கு பேர் மருத்துவமனையில்அனுமதி! அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள...
இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்ப... இலங்கையில் ஊடகவியலாளர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரி கைது! இலங்கையில், சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தி, காணாமல் போகச் ...
Tags: