100-வது ஆண்டைத் தொட்ட தஞ்சை சரஸ்வதி மஹால்!

100-வது ஆண்டைத் தொட்ட தஞ்சை சரஸ்வதி மஹால்!

100-வது ஆண்டைத் தொட்ட தஞ்சை சரஸ்வதி மஹால்!

சோழர்கள் காலத்தில் தொடங்கப்பட்டதாகக் கூறப்படும் உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நுாலகம் அரசுடைமையாக்கப்பட்டு 100-வது ஆண்டைத் தொட்டுவிட்டது. உலகிற்கு மிகப்பெரிய கல்வி அறிவுப் பொக்கிஷமாகத் திகழும் இதற்கு, அரசு விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

460 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் இலக்கணம், வரலாறு, அரிய வகை மூலிகைகள், மருத்துவம் பற்றிய குறிப்புகள் கொண்ட புத்தகங்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்பட்டுவருகின்றன. உலகின் பல பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலர், இங்குள்ள புத்தகம் மற்றும் ஓலைச்சுவடிகள் மூலம் தங்களுக்குத் தேவையான குறிப்புகளை எடுத்துச் செல்கின்றனர். இத்தகைய சிறப்புகள் கொண்ட நூலகம், அரசுடைமையாக்கபட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை, அரசு சார்பில் விமரிசையாக விழா எடுத்துக் கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து சரஸ்வதி மஹால் நூலக வட்டாரத்தில் பேசினோம். “இரண்டாம் சரபோஜி மன்னரால் கி.பி.1820-ம் ஆண்டு சரஸ்வதி மஹால் நுாலகம் உருவாக்கப்பட்டது. அப்போதே சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் போன்ற பல்வேறு மொழி நூல்கள் நுாலகத்தில் வைக்கப்பட்டன. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த மராட்டியர்கள், நூலகத்தை மிகச் சிறப்பாக நடத்தியதோடு, நூலகத்தில் இருந்து நூல்கள் பலவற்றையும் மொழிபெயர்ப்பு செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சியில், 1918-ம் ஆண்டு அக்டேபர் 5-ம் தேதி, சரஸ்வதி மஹால் நூலகம் அரசுடைமையாக்கப்பட்டு, பொது நூலகமாக அறிவிக்கப்பட்டது. தற்போது சரஸ்வதி மஹால் நுாலகம் அரசுடமயைாக்கபட்டு 100-வது ஆண்டைத் தொட்டுவிட்டது. இதைக் கொண்டாடும் விதமாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அரசுக்கு 100-வது ஆண்டைக் கொண்டாடுவதுகுறித்த கருத்துகள் அனுப்பிவைக்கபட்டுள்ளன” என்றனர்.

மேலும் சிலர், “சரஸ்வதி மஹால் நூலகம் சோழர்கள் காலத்தில், சரசுவதி பண்டாரகம், புத்தகப்பண்டாரம் எனவும், இந்த நூலகத்தில் பணி புரிந்தவர்கள் சரசுவதி பண்டாரிகள் எனவும் அழைக்கப்பட்டதாக கி.பி. 1122 இருந்த கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு, ஆரம்ப காலத்தில் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 700 சுவடிகள்தான் இருந்துள்ளன. இப்போது, பல்வேறு இடங்களில் சேகரிப்பட்ட, மொழிபெயர்க்கப்பட்ட நுால்கள் என 70 ஆயிரம் நுால்கள் உள்ளன. அத்துடன், 50 ஆயிரம் ஓலைச்சுவடிகள் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், சென்னை மாகாண அரசு 1918ல் அரசாணை 1306ல், சரஸ்வதி மஹால் நுாலகத்தை அரசுடமையாக அறிவித்தது. இந்த ஆண்டு 100-வது ஆண்டை எட்டியநிலையில், இதற்காக விழா எடுக்க இருப்பதோடு, நுாலகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தற்போது செய்யப்பட்டுவருகிறது. இந்த நேரத்தில், இந்த நூலகத்தின் வளர்ச்சியில் அரசு அதிக அக்கறைகாட்ட வேண்டும்” என்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: