கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கீழடியில் அகழாய்வு மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கீழடியில் விரிவான அகழாய்வு பணியை மேற்கொள்ள தமிழக அரசு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுற்றுலா, பண்பாட்டுத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


சிவகங்கை மாவட்டம் கீழடி யில் மத்திய தொல்லியல் துறையானது 3 முறை விரிவான அகழாய்வு மேற்கொண்டுள்ளது. அப்போது, செங்கல் கட்டுமானங்கள், உறைகிணறுகள், சுடுமண் பொம்மைகள், யானை தந்தத்தால் ஆன பொருட்கள் உள்ளிட்ட அரிய தொல்பொருட்கள் கிடைத்தன.

இந்த தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழகத்தின் பண்டைய கலாச்சாரத்தின் கூறுகளை முழுவதுமாக வெளிக்கொண்டு வரும் நோக்கில் விரிவான ஒரு அகழாய்வு மேற்கொள்ள ரூ.55 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, அத்தொகையை முன்பணமாக பெற அனுமதி வழங்குமாறு தொல்லியல் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார்.

அவரின் கருத்துருவை ஏற்று, கீழடியில் விரிவான அகழாய்வு மேற்கொள்ள ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில், அகழாய்வு பணி மேற்கொள்ள ஆள் கூலி, போக்குவரத்து செலவு, தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட செலவுகள் அடங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: