ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரிந்த தமிழக சிறுவன்!

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரிந்த தமிழக சிறுவன்!

ஸ்கேட்டிங்கில் உலக சாதனை புரிந்த தமிழக சிறுவன்!

ஸ்கேட்டிங்கில் 10 கிலோ மீட்டர் தூரத்தை 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து 7 வயது தமிழக சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத ஊத்துமலையை சேர்ந்த 7 வயது சிறுவன் ஆதவன் ஸ்கேட்டிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவரது ஸ்கேட்டிங் சாதனை நிகழ்ச்சியை தமிழக அமைச்சர் ராஜலெட்சுமி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டு பாட்டத்தூர், இராமநாதபுரம் விலக்கு, மலையான்குளம் உள்ளிட்ட இடங்களில் 6 வேகத் தடைகளை கடந்து, செவல்குளம் விலக்கு பகுதியை 35 நிமிடங்களில் கடக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஆனால், குறித்த நேரத்திற்கு முன்னதாக 32 நிமிடம் 48 வினாடிகளில் கடந்து சாதனை படைத்து, நியூஸ்லாந்தை சேர்ந்த 8 வயது மாணவன் ஜேம்ஸ் 6 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்திய ஸ்கேட்டிங் சாதனையை, 7 வயதே ஆன தமிழக மாணவன் ஆதவன் முறியடித்தார். உலக சாதனை படைத்துள்ள இந்த மாணவரை பள்ளி ஆசிரியர்களும், பொதுமக்களும் பாராட்டினர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலகக்கோப்பை- தமிழ... துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலகக்கோப்பை- தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்று சாதனை! ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் ஜூனியர் துப்பாக்க...
தமிழக வீராங்கனை இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்... தமிழக வீராங்கனை இளவேனில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் உலக சாதனை! ‘கீப் ஸ்மைலிங்.. கீப் ஷூட்டிங்..’ - இந்த வார்த்தைகள்தான் துப்பாக்கிச் சுடுதல் வீ...
தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! ... தமிழ் இருக்கைக்குக் கரம் கொடுத்த 7,335 தமிழர்கள்! - ஹார்வர்டு ஒப்பந்தத்தில் இடம்பெறப் போவது என்ன? ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான முழுப் பணமும் சேர்ந்த...
வேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியா... வேளாளர் சமூகம், தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத அங்கம்! அந்த இளைஞனைப் பார்த்து வெள்ளையர்கள் பயந்துதான் போனார்கள். அவனது அஞ்சா நெஞ்சுரமும் விடுதல...
Tags: