2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்!

2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்!

2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்வான முதல் தமிழக வீரர்!

ஆசியத் தற்காப்புக் கலைகளில் ஒன்றான டேக்வாண்டோ விளையாட்டில், தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் கலக்கி வருகிறார். சென்னையைச் சேர்ந்த 22 வயதான உதயகுமார் என்ற கல்லூரி மாணவர், 2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தேர்ச்சி பெற்ற ஒரே இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

சிறுவயது முதலே டேக்வாண்டோவில் ஆர்வம் கொண்ட உதயகுமார், 2016-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப்பதக்கம் வென்று, தொடர்ந்து தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

லைட் பிரிவில் (74 கிலோ) பயிற்சி பெற்று வரும் உதயகுமார், 2017-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற தெற்காசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்று அசத்தினார். பெரிதும் கவனிக்கப்படாத டேக்வாண்டோ விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற உதயகுமாரின் ஆர்வம், அவரை மாநில, தேசிய, தெற்காசியப் போட்டிகளில் பதக்கங்களை வெல்லத் தூண்டியது. பதக்கங்களைக் குவித்த உதயகுமார், கின்னஸ் சாதனையையும் விட்டுவைக்கவில்லை. 2017-ம் ஆண்டு மதுரையில் நடந்த, `பூம்சே’ எனப்படும் டேக்வாண்டோ விளையாட்டின் தடுபாட்ட முறையைத் தொடர்ந்து 30 நிமிடங்களுக்குச் செய்து கின்னஸ் சாதனையை நிகழ்த்தினார்.

சர்வதேச அளவில் நடத்தப்பட்ட டேக்வாண்டோ போட்டிகளில், 2000-ம் ஆண்டில்தான் முதல்முறையாக ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டது. சிட்னி ஒலிம்பிக்கில் அங்கீகரிக்கப்பட்ட டேக்வாண்டோ விளையாட்டு, ஒலிம்பிக் தொடரின் அபாயகரமான விளையாட்டுகள் பட்டியலிலும் அடக்கம். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றால் மட்டுமே, உதயகுமாரால் ஒலிம்பிக் தொடருக்குத் தேர்ச்சி பெற முடியும். 2019 அமெரிக்க வேர்ல்டு ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் தொடருக்குத் தகுதி பெற்றிருக்கும் உதயகுமார், நிதி நெருக்கடி காரணமாகத் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள இந்தத் தொடருக்கு இந்தியாவிலிருந்து தேர்வாகியுள்ள ஒரே வீரர், அரசு உதவிகளை எதிர்பார்த்துள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: