தமிழ் திருநங்கை என்ற காரணத்தால், விமானப் பணி பெண் வேலை மறுப்பு! கருணைக் கொலைக்கு ஜனாதிபதியிடம் விண்ணப்பம்!

தமிழ் திருநங்கை என்ற காரணத்தால், விமானப் பணி பெண் வேலை மறுப்பு! கருணைக் கொலைக்கு ஜனாதிபதியிடம் விண்ணப்பம்!

தமிழ் திருநங்கை என்ற காரணத்தால், விமானப் பணி பெண் வேலை மறுப்பு! கருணைக் கொலைக்கு ஜனாதிபதியிடம் விண்ணப்பம்!

தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக் கோரி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏர் இந்தியா விமான நிறுவனம் பணி வழங்க மறுத்ததால் தன்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடக் கோரி அவர் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை ஷானவி பொன்னுசாமி. குடும்பத்தின முதல் பட்டதாரி. அதுவும் பொறியியல் பட்டதாரி. மாடலிங், நடிப்பு என பல திறமைகளையும் கொண்டவராக இருக்கிறார். ஆனால், இவை ஏதும் அவர் விண்ணப்பித்த வேலைக்கு தகுதி சேர்க்கவில்லை. திருநங்கை என்பதால் அவரை பணிக்கு சேர்க்க முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துவிட்டது. தங்கள் பணிநியமனக் கொள்கையில் மூன்றாம் பாலினத்தவரை வேலைக்குச் சேர்த்துக் கொள்ள இடமில்லை எனக் கூறி அவருக்கு பணி வழங்க மறுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஷானவி பொண்ணிசாமி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். பாலின பேதத்தால் ஏர் இந்தியா தனக்கு பணி வழங்க மறுப்பதாகக் கூறியிருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அந்த நோட்டீஸுக்கும் இதுவரை எந்தவித விளக்கமும் இருதரப்பிலிருந்துமே அளிக்கப்படவில்லை.

இந்நிலையில், ஷானவி பொண்ணுசாமி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், “பாலின பேதத்தால் எனக்கு ஏர் இந்தியா நிறுவனம் பணி அளிக்க மறுக்கிறது. இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்த என்னால், ஏர் இந்தியா நிறுவனத்தையோ அல்லது விமான போக்குவரத்து அமைச்சகத்தையோ பேச வைக்கமுடியவில்லை. அதனால், இந்திய அரசின் கைகளாலேயே உயிர் துறப்பதை பெருமிதமாகக் கருதுகிறேன். என்னை கருணைக் கொலை செய்துவிடுங்கள். எனது அன்றாட உணவு செலவவுக்கே என்னிடம் பணம் இல்லை. அப்படியிருக்க, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு எப்படி வழக்காடுவதற்கு கட்டணம் கொடுக்க முடியும். என்னை கருணைக் கொலை செய்ய உத்தரவிடுங்கள்” என உருக்கமாக வேண்டியுள்ளார்.

ஷானவியால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் :

From ,

Shanavi Ponnusamy

To ,
The President Of India
Rastrapati Bhavan,
NewDelhi.

Respected Sir,
Sub: Trans-women requesting for Mercy Killing due to gender discrimination by Ministry of Civil Aviation and Air India .

I am the pettioner who filled a case in supreme court of india for civil aviation and air india denied my candidature because of gender discrimination.

After long struggle I successfully completed My engineering graduation in 2010 and I am the first graduate in my generation.I was working with Air India customer support executive(International).where I have successfully served for 1 year later I undergone to my surgery.The procedure of name and gender change published in tamilnadu gazette.

Now from past two years,4 times I got a call letter for Air India cabin crew female post but my name was not in final list .Later i came to know that Air india reserved seats only for female where I cant make cutoff then after long struggle to contact Ministry of civil aviation and Air india replied that as per their recruitment policy they dont have category for ‘Transwomen’

Though I have eligibility and experience , more than that citizen of india but denied my basic rights just because of my nature of gender.

So our Supreme court of india takes step on it and asked Air india and Ministry of Civil aviation to respond with in 4 weeks on 6 th nov’17.But till the date there is no response from them and am really facing a survival issue because of denying my basic rights to live in this country.It is clearly understand that indian government not ready to respond on my survival issue and employment question even supreme court order them to response with in 4 weeks on 6th nov’17. And I am not in a condition to pay for my daily food expense so its absolutely not at all possible to manage supreme court case by paying advacates and registrar court and etc.

So here am requesting to you that as am not able to raise in quetion againt ot Air india and Ministry of civil aviation as there is no response from them already ,Kindly do ‘Euthanize’.I am proud to die in my indian government hand.

Jaihind
your truly,
Shanavi Ponnusamy.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: