வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் காவல்துறை தீவிரம்!

வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரம்!

வெளிநாடுகளில் தமிழக சிலைகள் மீட்கும் முயற்சியில் போலீஸ் தீவிரம்!

சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரால், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்க, போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஜெர்மனியில் பதுங்கி இருந்த, சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திர கபூரை, 81, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். 2002ல், விருத்தாசலம், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, அர்த்தநாரீஸ்வரர், பிரத்தியங்கரா தேவி உள்ளிட்ட பல சிலைகளை திருடியுள்ளான்.

அவற்றை, அமெரிக்காவில், தனக்கு சொந்தமான, அருங்காட்சியகத்தில் வைத்திருந்ததும், பின், பிரத்தியங்கரா தேவி சிலையை, ஆஸ்திரேலியாவுக்கு கடத்தியதும் தெரிய வந்தது. ஆனால், சிலைகள் திருடு போனது குறித்து, கோவில் நிர்வாகம், போலீசில் புகார் அளிக்கவில்லை.

இதனால், மாநில சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், தானே புகார்தாரராக மாறி, வழக்குப்பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் இருந்த, பிரத்தியங்கரா தேவி சிலையை மீட்ட போலீசார், டில்லி அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். விரைவில், அந்த சிலை, தமிழகம் கொண்டு வரப்பட உள்ளது. மேலும், கடத்திய பிரத்தியங்கரா தேவி சிலையை, ஆஸ்திரேலிய அரசுக்கு, சுபாஷ் சந்திர கபூர், 1.49 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளான். இந்த பணத்தை, அவனது அமெரிக்க அருங்காட்சியகத்திடம் இருந்து, வட்டியுடன் பெற, போலீசார் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

அதேபோல, தமிழகத்தில் இருந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூருக்கு கடத்தப்பட்ட, பஞ்சலோக நடராஜர் சிலை உட்பட, 16 சிலைகளை மீட்கவும், போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: