ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரை விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவை முடிவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் 7 பேரையும் விடுவிக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்ய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை முன் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், இது தொடர்பான வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 7 பேரை முன்விடுதலை குறித்து, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என தெரிவித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் கிடைத்ததும், ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என ஏற்கெனவே அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஆளுநருக்கு பரிந்துரைக்க, அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிவரும் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது, தங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அவர்கள் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், 7 பேரை முன்விடுதலை செய்வது குறித்து, ஆளுநருக்கு பரிந்துரை செய்வதும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த முடிவை, சிறையில் வாடுவோரின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி கூறுகையில், `தமிழக அரசின் இந்த நடவடிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது. என் மகன் விரைவில் வீடு திரும்புவான் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன், `தமிழக அரசின் பரிந்துரை எங்கள் குடும்பங்களுக்கு விளக்கேற்றி வைத்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். ஆளுநர் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டும்” என்றார். பேரறிவாளன் தயார் அற்புதம்மாள், “என் மகன் விரைவில் வீடு திரும்புவான் என நம்பிக்கையுள்ளது. முதலமைச்சருக்கும், ஆளுநருக்கும் நான் நன்றி தெரிவித்த்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: