ரஷ்ய நாட்டில் உள்ள தமிழறிஞர்கள் சிலர், தமிழாய்வு தொடர்பான திட்ட பணிகளுக்காக, மாசுகோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் ரசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி (Prof Alexander Dubyanskiy) அவர்களின் தலைமையில், தமிழகம் வந்திருக்கின்றனர்.
உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்
அவர்களுடன், ஒரு சந்திப்புக்கும், கலந்துரையாடலுக்கும், செம்மஞ்சேரியில் உள்ள, ஆசியவியல் நிறுவன மாநாட்டு அரங்கில், இன்று காலை, 10:30 மணிக்கு நடைபெற்றது.
கலந்துரையாடலுக்கு ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குனர், ஜி.ஜான் சாமுவேல் தலைமை வகித்தார்.
ரசிய நாட்டின் மூத்த தமிழறிஞருமான பேராசிரியர் அலெக்சாண்டர் துபியான்சுகி தெளிவான தமிழில் தனது உரையை நிகழ்த்தியது வந்திருந்த அனைவரையும் ஆச்சிரியத்திற்கு உள்ளாக்கியது. அவரோடு வந்திருந்த அவரது தமிழ் மாணவரும் தமிழிலேயே உரை நிகழ்ச்சினார்.
கூட்டத்திற்கு வந்திருந்தாவர்களோடு, அவர்கள் தமிழிலேயே கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினர்.
கூட்டத்திற்கு இலக்கிய செல்வர் குமரி ஆனந்தன், உலகத் தமிழர் பேரவை – யின் ஒருங்கிணைப்பாளர் அக்னி, இலக்குவனார் திருவள்ளுவன், முனைவர் கு.மோகன்ராசு, புலவர் சுந்திரராசனார் என பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.