தமிழ்ச் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!

தமிழ் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!

தமிழ் சங்கமம் மாநாட்டிற்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு!

தமிழ்ச் பண்பாடு மற்றும் தொல்லியத்துறை அமைச்சர், பாண்டியராஜன் ”தமிழ் சங்கமம் மாநாட்டிற்கு, ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,” என தெரிவித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


தஞ்சை தமிழ் பல்கலை மற்றும் அனைத்திந்திய தமிழ் சங்க பேரவை சார்பில், ‘தமிழ் சங்கமம்’ என்ற தலைப்பில், இந்திய தமிழ் சங்கங்களின் மூன்று நாள் மாநாடு, 27ம் தேதி துவங்கி, நேற்று (29.07.2018) முடிவடைந்தது.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது; ”உலக அளவில் புலம் பெயர்ந்தவர்கள் பட்டியலில், தமிழர்கள் இரண்டாவது இடத்தில் உள்ளனர். உலகில், 7,500 மொழிகள் பேசப்படுகின்றன. அதில், 3,000 மொழிகள், அழிந்து வருவதாக, யுனெஸ்கோ அமைப்பால் கண்டறியப்பட்டுள்ளது. செல்வாக்கு மிக்க பட்டியலில், தமிழ் மொழி, 14-வது இடத்தில் உள்ளது. வரும் மூன்றாண்டுகளில், யுனெஸ்கோ தயாரிக்க உள்ள, செல்வாக்கு மிக்க மொழிகளின் பட்டியலில், தமிழ், 10-ம் இடத்திற்குள் வர வேண்டும். அதற்கு, தமிழ் பல்கலை ஊற்றுக்கண்ணாக இருக்கும்.

உலக தமிழ் சங்கத்தின் கட்டடத்தை, 36 கோடி ரூபாயில் கட்டி வருகிறோம். பழந்தமிழர் கண்காட்சி, 50 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ் வளர் மையங்களில் மூலம், தமிழை வரையறைப்படுத்தி, நெறிப்படுத்தி, இணையதளம் மூலம் வழங்கவுள்ளோம். இதில், ஒரு கோடி பேர் பதிவு செய்து உள்ளனர். தமிழ்சங்கமம் மாநாட்டிற்கு, முதல்வர், ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை, மாநாட்டினை நடத்த ஏற்பாடு செய்கிறோம். உலக தமிழ் மாநாடு, அடுத்த ஆண்டு, சிகாகோவில் நடக்கிறது. இவ்வாறு பேசினார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: