இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!

இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!

இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, இலங்கைக்கு அனுப்பிவைக்கக் கோரி அகதி வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


இலங்கையில் உள்ள கொழும்பு பீசர்மேன் பீச் பகுதியைச் சேர்ந்த சாய் மகன் அஜய்குமார் என்ற விஜய் (30), மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கான முகாமில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த விஜய், திடீரென தனது கையில் வைத்திருந்த கேனிலிருந்து பெட்ரோலை தன்மீது ஊற்றி தீ வைத்துத் தற்கொலை செய்ய முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவல் துறையினர் மற்றும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் அவரைத் தடுத்து, அருகில் உள்ள கேணிக்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், வாலிபர் விஜய்யை கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அஜய்குமார் கூறியதுதாவது ”நான் 7 வயதில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வந்தேன். வந்ததில் இருந்து மண்டபம் அகதிகள் முகாமில் வசித்துவருகிறேன். எனது சொந்த நாடான இலங்கைக்குச் செல்ல விரும்புவதாகப் பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் யாரும் என்னை அனுப்பவில்லை. கடந்த 2015-ம் ஆண்டு, கள்ளப்படகில் ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல முயன்றபோது, கியூ பிரிவு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டேன்.

எனது வழக்கை விசாரித்த ராமேஸ்வரம் நீதிமன்றம், என்னை இலங்கைக்கு அனுப்பிவைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்னை இலங்கைக்கு அனுப்பவில்லை. நான் தங்கி இருக்கும் மண்டபம் அகதிகள் முகாமிலும் போதுமான மின்வசதி இல்லை. குடிக்கத் தண்ணீர் இல்லை. என்னை இலங்கைக்கு அனுப்பிவைக்க பலமுறை கூறியும் அனுப்பி வைக்காததால் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றேன்” என்று கூறியுள்ளார்.

காவல் துறையினர் அவரைச் சமாதானப்படுத்தியதுடன், இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது!... இலங்கைக்கு படகில் வந்த 6 அகதிகள் கைது! தமிழகத்தில் உள்ள அகதி முகாமில் இருந்த மன்னார் உயிழங்குளத்தைச் சேர்ந்த 6 அகதிகள் நேற்று (புதன்கிழமை) படகு வழிய...
அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11... அனுமதியின்றி இலங்கை சென்ற அகதிக் குடும்பத்தினர் 11 மாத குழந்தையுடன் கைது! தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் தங்கியிருந்து, கள்ளத்தனமாக இலங்கை செ...
மே 16,17,18 – முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை! ... மே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை! தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட அவலம்! இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற...
127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரண... 127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது - விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு! மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கை அகதிகளிடம் தொடர்ந்து விசாரண...
Tags: