பேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் காலமானார்!

பேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்!

பேரூர் ஆதினம் பெரியபட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார்!

கோவை பேரூர் ஆதினம் பெரியப்பட்டம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் காலமானார். இவருக்கு வயது 97. தமிழகத்தின் வயது முதிர்ந்த சைவ மடாதிபதியான ராமசாமி அடிகளார் 65 ஆண்டுகளுக்கும் மேலான பேரூர் தமிழ் கல்லூரி, தாய் தமிழ் பள்ளியை நிர்வகித்து வந்தார். காட்டம் பட்டியில், சாந்தலிங்க அடிகளார் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜர் அடிக்கல் நாட்டினார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

சாந்தலிங்க இராமசாமி அடிகளார் என்பவர் கோயம்புத்தூர் மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் கீழை சிதம்பரம் என்று அழைக்கப்படும் 400 வருடப் பழமையான திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழிப் பேரூராதீனத்தின் குருமுதல்வராக இருந்தார். உதகை அருள்மிகு ஆலமர் செல்வர் திருமடத்தின் ஆறாவது குருமகா சந்நிதானமாகவும் திகழ்ந்து வந்தவர். கொங்கு நாட்டின் சமய சமுதாய வளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக்கும் இவர் பெருந் தொண்டாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராக (1972 – 1978) இவர் பணியாற்றினார்.

அப்போது தமிழ் மொழி வாயிலாகவே அனைத்து அலுவல்களும் நிகழ வேண்டும் என்பதில் பேரார்வம் கொண்டு தமிழ்க் கல்லூரிகளில் இளங்கலை இலக்கியப் பாடத்தைக் கொண்டு வந்து தமிழ்க் கல்லூரிகளைக், கலைக் கல்லூரிகளுக்கு இணையான நிலைக்கு உயர்த்தினார். இவர், தமிழ்ப் பயிற்று மொழி, தமிழ் வழி பாட்டு மொழி, ஆகியவற்றிற்காகக் குரல் கொடுத்து வந்தவர்.

தமிழக கோவில்களில் தமிழில் குடமுழக்கு செய்ய பாடுபட்டவர். தமிழக அரசின் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகாலாம் என்ற சட்டத்திற்கு ஆரம்பம் முதல் ஆதரவு அளித்து, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகாலாம் என்ற தமிழக அரசு குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இவரின் மாணவர்களில் பலர், உலகின் பலபாகங்களில் முக்கிய பணிகளில் இருந்து வருகின்றனர். அவர்கள் தொழிலதிபர்களாகவும், அரசு, தனியார் நிறுவன உயர் அதிகாரிகளாவும் பணியாற்றி வருகின்றனர். இதேபோல, பேரூரில் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் மருத்துவமனையும் இயங்கி வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பேரூர் மடத்தில் இன்று மரணமடைந்தார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: