பனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்!

பனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்!

பனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்!

பண்டைய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம் இருந்தன. அவற்றை மேன்மேலும் வளர்க்க யாரும் முயற்சி மேற்கொள்ளாததால், பனை மரங்களின் வளர்ச்சி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனங்கொட்டைகளைப் புதைத்து வைத்து, பனை மரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

பனை மரங்கள் மூலம் பதநீர், நுங்கு, பனங்கற்கண்டு, பனை வெல்லம் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவை, இயற்கை மருத்துவக் குணம் கொண்டிருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயன்படுகிறது. இம்மரங்களை வளர்க்க அதிக சிரமம் தேவையில்லை. பனங்கொட்டைகளை மண்ணில் போட்டு புதைத்துவிட்டாலே போதும், தினமும் தண்ணீர் ஊற்றவோ, வேலி போட்டுப் பராமரிக்கவோ அவசியமில்லை. தானாகவே வளர்ந்துவிடும். குறிப்பாக, ஆற்றங்கரைகளில் பனங்கொட்டைகளை நட்டு வைத்தால் அவை வளர்ந்து, கரைக்கு மிக பலத்தைக் கொடுக்கும். கரை எளிதில் உடையாது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக 1000-க்கும் மேற்பட்ட பனங்கொட்டைகளைப் பொறுக்கி எடுத்து, சாலை ஓரங்களிலும், ஆற்றங்கரைகளிலும் விதைப்பதை விருப்பதோடு செய்து வருகிறார், நாகை மாவட்டம் தரங்கம்படி அருகே உள்ள அரசலங்குடியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் கரிகாலன். அவரிடம் பேசியபோது, ”எப்போதோ, யாரோ விதைத்து மரமாகியுள்ள பனை மரத்தின் பலன்களை இன்று நாம் அனுபவித்து வருகிறோம். அதுபோல, நாமும் பனங்கொட்டைகளை நட்டுவைத்தால், தானே எதிர்காலத்தில் நம் சந்ததியினருக்குப் பயன்படும். எனவே, என் கண்ணில்படும் பனங்கொட்டைகளைப் பொறுக்கி எடுத்து, ஆறு மற்றும் சாலை ஓரங்களில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக நான் விதைத்த கொட்டைகளிலிருந்து முளைத்து வரும் பனங் கன்றுகளைப் பார்க்கும்போது, பெற்ற பிள்ளைகளைப் பார்க்கும் சந்தோஷம் ஏற்படும். மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட பனை மரங்களை வளர்க்க பொதுமக்களும், அரசும் முன்வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தா... பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்! இது பனைமரம் மட்டுமல்ல, நமது பாரம்பரியப் பார்வையில் பயன்மரம். ஏனெனில், அடி ...
200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் ஒரு பனைமரம்!... 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் ஒரு பனைமரம்! கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான...
சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு!... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு! தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிர...
அகத்தியமலை (பொதிகைமலை) தமிழ் மலை அதிசயங்கள்!... அகத்தியமலை (பொதிகைமலை) தமிழ் மலை அதிசயங்கள்! அகத்தியமலை அல்லது அகத்தியக் கூடம் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை முடியாகும். இம்மலை நெய...
Tags: 
%d bloggers like this: