நொய்யல் கரையில் அகழாய்வு பணி: மத்திய தொல்லியல் துறை தீவிரம்!

நொய்யல் கரையில் அகழாய்வு பணி: மத்திய தொல்லியல் துறை தீவிரம்!

நொய்யல் கரையில் அகழாய்வு பணி: மத்திய தொல்லியல் துறை தீவிரம்!

நொய்யல் கரையில் அமைந்துள்ள, கொடுமணல் பகுதியில், மத்திய தொல்லியல் துறை சார்பில், மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்கியுள்ளன. திருப்பூர் – ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் கரையில், கொடுமணல் அமைந்துள்ளது. இங்கு, 2,500 ஆண்டுக்கு முந்தைய மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. தற்போது, 36 ஏக்கர் பரப்பளவில், அக்கால வாழ்விட பகுதி; 96 ஏக்கரில், பண்டைய ஈமக்காடு பகுதியில் அகழாய்வு நடைபெறுகிறது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


மத்திய, மாநில அரசு தொல்லியல் துறை மற்றும் தமிழ் பல்கலை சார்பில்,1985 முதல், 2013 வரை, இப்பகுதியில், எட்டு முறை, 78 குழிகள் அமைத்து, அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கல் மணிகள் செய்யும் தொழிற்கூடம், செம்பு, இரும்பு உருக்கப்பட்ட தொழிற்கூடங்கள், ரோம் நகருக்கான வணிக தொடர்பு, 500க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடுகள், நுால் நுாற்க பயன்படும் தக்கை மற்றும் அதிந்தை, மகந்தை, அமனன், வேளி, பன்னன் என்ற பெயர் பொறித்த மண் பாண்டங்கள், பல வண்ண கல்மணிகள், ஆபரணங்கள், இறந்தவர்களை அடக்கம் செய்த கல் வட்டம், கல் பதுகை என, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்தன.

சேரர் தலைநகரமாக இருந்த கருவூரையும், மேலைக்கடற்கரை துறைமுகமான முசிறி பட்டணத்தையும் இணைக்கும், பெருவழியில் அமைந்த தொழில் நகரமாகவும்; உள்நாடு, வெளிநாடுகளுடன் வணிக உறவு வைத்திருந்த செழிப்பான பகுதியாகவும் இருந்த இப்பகுதியில் கிடைக்கும் தொல்பொருட்கள், பழங்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய உதவு வதாக உள்ளன.மத்திய தொல்லியல் துறை கமிஷனர் ஸ்ரீராம் தலைமையிலான ஆய்வுக்குழு, அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளது. ஸ்ரீராம் கூறுகையில்,“மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணி துவங்கியுள்ளது. முதல் கட்டமாக, 16 குழிகள் அமைத்து, இப்பணி துவங்கியுள்ளது. இது, ஆறு மாதம் வரை நீடிக்கும்,” என்றார்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: