தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில் லட்சுமணன் தங்கம்!

தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில் லட்சுமணன் தங்கம்!

தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில் லட்சுமணன் தங்கம்!

சென்னையில் நடந்து வரும், தேசிய அளவிலான சீனியர் ஓபன் தடகள போட்டியில், 5,000 மீ., ஓட்டப் பந்தயத்தில், பெண்கள் பிரிவில், ரயில்வே வீராங்கனை சூர்யா; ஆண்கள் பிரிவில், ராணுவ வீரர் லட்சுமணன் ஆகியோர், முதலிடம் பிடித்து தங்கம் வென்றனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்.


தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், தேசிய அளவிலான, 57வது சீனியர் ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில், நேற்று துவங்கியது. அதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 1,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். நேற்று காலை, 5,000 மீ., ஓட்டப்பந்தயம் நடந்தது. அதில், ஆண்கள் பிரிவில், ராணுவ அணி வீரர் லட்சுமணன், பந்தய துாரத்தை, 14 நிமிடம், 4.21 வினாடிகளில் கடந்து, முதலிடத்தை தனதாக்கினார். அடுத்த இரண்டு இடங்களை, ரயில்வே அணி வீரர் அபிஷேக், ராணுவ வீரர் மான் சிங் பிடித்தனர். பெண்கள் பிரிவில், ரயில்வே அணி வீராங்கனைகள் சூர்யா, சிந்தியா ஆகியோர், முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். போலீஸ் அணி வீராங்கனை சங்கீதா, மூன்றாம் இடம் பிடித்தார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

தமிழக வீரர் லட்சுமணன், 22-வது ஆசிய தடகளத்தில் 10,0... தமிழக வீரர் லட்சுமணன், 22-வது ஆசிய தடகளத்தில் 10,000 மீ., ஓட்ட பந்தயத்திலும் முதலிடம் பிடித்து 2-வது தங்கத்தை வென்றார்! தமிழக வீரர் லட்சுமணன், நேற்ற...
22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் ... 22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்! ஆசிய தடகளத்தின், 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித...
தமிழக காவல் துறையின் 57 வது மாநில அளவிலான தடகள போட... தமிழக காவல் துறையின் 57 வது மாநில அளவிலான தடகள போட்டி: தமிழக ஆயுதப்படை அணி சாம்பியன்! தமிழக காவல் துறையின் 57 வது மாநில அளவிலான தடகள போட்டி கோவை நேர...
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்ப... பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன், இந்த ஆண்டு அர்ஜுனா விருது உறுதி! தேசிய விளையாட்டு விருதுகள் அதிகாரபூர்வமாக மத்திய அரசால் அறிவி...
Tags: