தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் தமிழக அணிகள் வெற்றி!

தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் தமிழக அணிகள் வெற்றி!

தேசிய அளவிலான கூடைபந்து போட்டியில் தமிழக அணிகள் வெற்றி!

தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாள் ஆட்டங்களில் இரு பாலர் பிரிவுகளில் தமிழகம் வெற்றி பெற்றது.

ஆடவர் மற்றும் மகளிருக்கான 68-ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கியது.


உலகத் தமிழர் பேரவை-யில் உறுப்பினராக….. இங்கு அழுத்தவும்


‘லீக்’ மற்றும் ‘நாக் -அவுட்’ முறையில், போட்டிகள் நடக்கின்றன. இதில் ஆடவர் பிரிவில் ‘தகுதி-1’-இன் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் தமிழகம் 113-58 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணாவை வென்றது. அதிகபட்சமாக தமிழகத்தின் ஜஸ்டின் 22, ஹரியாணாவின் அங்கித் 18 புள்ளிகள் வென்றனர். அதேபோல், பஞ்சாப் 76-65 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத்தை வீழ்த்தியது. பஞ்சாப் வீரர் குர்வீந்தர் சிங், குஜராத் வீரர் ஹர்பால் அதிக புள்ளிகள் வென்றனர்.

‘ஏ’ பிரிவு ஆட்டத்தில் உத்தரகண்ட் 85-62 என்ற கணக்கில் ஒடிஸாவை வென்றது. உத்தரகண்ட் வீரர் மோஹித் பந்தாரி, ஒடிஸா வீரர் சுமன் சாஹு அதிக புள்ளிகளை கைப்பற்றினர். ஆந்திர பிரதேசம் 76-75 என்ற கணக்கில் ஜம்மு காஷ்மீரையும், புதுச்சேரி 54-22 என்ற கணக்கில் தெலங்கானாவையும், சத்தீஸ்கர் 49-32 என்ற கணக்கில் கோவாவையும், உத்தரப் பிரதேசம் 88-76 என்ற கணக்கில் மேற்கு வங்கத்தையும் வென்றன.

இப்போட்டியின் மகளிர் பிரிவில் தமிழகம் 68-48 என்ற புள்ளிகள் கணக்கில் மத்திய பிரதேசத்தை வென்றது. அதேபோல், ராஜஸ்தான் 89-61 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானாவை வென்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஏ.எஸ்.தாம்பியும், தெலங்கானா அணியில் நிஷா சர்மாவும் அதிக புள்ளிகள் பெற்றனர்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்க... காலண்டர் போட்டியில் மாணவர், மாணவி சாதனை- திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரிலிருந்து நாசா வரை! அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா நடத்திய 201...
2018 தமிழால் இணைவோம் – உலகத் தமிழர் பேரவை : ... உலகத் தமிழர் பேரவை - World Tamil Forum - Mobile APP தரவிறக்கம் 2018 தமிழால் இணைவோம்!!! - Mobile APP தரவிறக்கம் உலகத் தமிழர் பேரவை - World Tamil For...
தமிழ் உலகம் – 1 தமிழ் உலகம் - உலகத் தமிழர் பேரவையின் அச்சிட்ட - மின்னிதழ் தமிழ் உலகம் -1 : (உலகத் தமிழர் பேரவையின் - மின்னிதழ் உங்களுக்காக கீழே இணைக்கப்பட்டிருக்கி...
உயிருக்கு போராடிய இலங்கை மாணவி வித்தியா அல்போன்ஸ் ... உயிருக்கு போராடிய இலங்கை மாணவி வித்தியா அல்போன்ஸ் லண்டனில் சாதனை! புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக...
Tags: