11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முகிலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முகிலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

11-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முகிலன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகிலன் கடந்த 11 நாள்களாக சிறையில் உண்ணாவிரதம் இருந்துவருவதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?


சுற்றுச்சூழல் போராளியான முகிலன் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடந்த நிலத்தடி நீர் பாதுகாப்பு தொடர்பான போராட்டத்தில் கலந்துகொண்டு திரும்பும் வழியில் அவரை போலீஸார் கைது செய்தார்கள். அவரது கைது விவகாரத்தில் போலீஸார் எந்த வழிமுறைகளையும் பின்பற்றவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்தது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த 269 நாள்களாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ளார். இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். கூடங்குளத்தில் ஒரு லட்சம் அப்பாவி மக்கள்மீது தொடரப்பட்ட வழக்குகளைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 11 நாள்களாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அதனால், சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காகப் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரை விடுவிக்க வலியுறுத்தி அநீதிக்கு எதிரான கூட்டியக்கம், காவிரி பாதுகாப்பு இயக்கம், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் சார்பாக கையெழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நலம் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியரின் சார்பாக கோட்டாட்சியர் மைதிலி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முகிலனிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால், தனது கோரிக்கையை ஏற்றால் மட்டுமே உண்ணாவிரதத்தை கைவிடுவதாக முகிலன் உறுதியாகத் தெரிவித்துவிட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. அதனால் முகிலன் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருவது அவரது நண்பர்களையும் சமூக ஆர்வலர்களையும் கவலையடைய வைத்துள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: