பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபரை வரவேற்க பேனர் வைக்கலாம்! – சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி!

பிரதமர் நரேந்திர மோடி – சீன அதிபரை வரவேற்க பேனர் வைக்கலாம்! – சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் மாமல்லபுரத்தில் சந்திக்கும் நிகழ்வு வரும் 11ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடக்கிறது.

சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய, மாநில அரசுகள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அரசு பேனர் வைக்க இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட தி.மு.க. தரப்பு வழக்கறிஞர், அனுமதி வழங்கும் அதிகாரிகளே, உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சத்திய நாரயணன், சேஷசாயி அமர்வு, விதிகளை பின்பற்றி பேனர் வைப்பது அரசின் கடமை என்று அறிவுறுத்தியதுடன், பேனர் வைக்க அனுமதி வழங்கினர். இது குறித்து தமிழக அரசே முடிவெடுக்கவும் உத்தரவிட்டனர். விதிகளை மீறி பெரிய அளவிலான பேனர்களையோ, கட்சி சார்ந்த பேனர்களையோ வைக்க கூடாது எனவும் அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: