மறைமலை அடிகளாரின் சொத்துக்கள் அபகரிப்பு என மறைமலை அடிகளார் பேரன் புகார்!

மறைமலை அடிகளாரின் சொத்துக்கள் அபகரிப்பு என மறைமலை அடிகளார் பேரன் புகார்!

மறைமலை அடிகளாரின் சொத்துக்கள் அபகரிப்பு என மறைமலை அடிகளார் பேரன் புகார்!

தனது சொத்தை அபகரித்ததாக தமிழறிஞர் மறைமலை அடிகளார் பேரன் திருவரங்க வைரமுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத்மிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்


தழிழறிஞரும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மறைமலை அடிகளார். இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு எண்ணில் அடங்காதது. மறைமலை அடிகளாருக்கு நெல்லை மாவட்டம் முனீர்பள்ளம், சேரன் மகாதேவி ஆகிய இடங்களில் நிலங்களும், பாளையங் கோட்டையில் 7 வீடுகளும், சென்னை மண்ணடியில் ஒரு வீடும், ஆர்வார்பேட்டை டிடிகே. சாலையில் சைவசித்தாந்த பதிப்பகம் என்ற பெயரில் வீடும் உள்ளது. மறைமலை அடிகளாரின் மகள் நிலாம்பிகை அம்மையார்.

இவரது மகன் திருவரங்க வைரமுத்து (82). இவர் தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் பேராசிரியராக உள்ளார். இவர், அமெரிக்காவில் உள்ள கலிப்போர்னியா மாகானத்தில் உள்ள பிரபல கல்லூரியில் பல ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்பித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பல கோடி மதிப்புள்ள வீட்டை தனது சித்தாப்பா மருமகன் முத்துகுமார சாமி அபகரித்து விட்டதாகவும், தனது சகோதரி மற்றும் சகோதரருக்கு அதிகமாக தொல்லை கொடுத்ததாகவும் மறைமலை அடிகளாரின் பேரன் திருவரங்க வைரமுத்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் ஓன்று அளித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் மறைமலை அடிகளாரின் பேரனை நேரில் அழைத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, வீட்டை அபகரித்த நபரிடம் இருந்து எனக்கு சொந்தமான வீட்டை வாங்கி தர வேண்டும் என்று கூறினார். மேலும் இந்த புகாரின்படி உயர் போலீசார் விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Post / தொடர்பு கட்டுரைகள் :

‘பைந்தமிழ் ஆசான்’ கா.நமச்சிவாய முதலியார்!... ‘பைந்தமிழ் ஆசான்’ கா.நமச்சிவாய முதலியார்! 1906ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பாடங்களை படிக்க ஆங்கில அறிஞர்கள் எழுதிய பாடங்களையே படிக்க வேண்டிய நிலை இருந்தது....
தமிழவேள் த.வே.உமா மகேசுவரனார்!... தமிழவேள் த.வே.உமா மகேசுவரனார்! முதல், இடை, கடைத் தமிழ்ச் சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி தாழ்வு நிலையடைந்த...
அழைப்பிதழ் : ‘தமிழ் உலக சந்திப்பு’ ... தமிழ் உலக சந்திப்பு > இடம் : **உமாபதி அரங்கம்**, அண்ணா சாலை, சென்னை, தமிழகம் > நேரம் : 01-10-2016 சனிக்கிழமை மாலை 5 மணி : அழைப்பிதழ் : தமிழ் ...
தமிழர் புத்தாண்டு – தையா? சித்திரையா?... தமிழர் புத்தாண்டு – தையா? சித்திரையா? சித்திரை 1 தான் தமிழ் புத்தாண்டு என நாம் கொண்டாடி வந்த ஆண்டுக் கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக் கொண்டால் அத...
Tags: