அறிவிப்போடு நின்றுபோன மாமல்லபுரம் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம்!

அறிவிப்போடு நின்றுபோன மாமல்லபுரம் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம்!

அறிவிப்போடு நின்றுபோன மாமல்லபுரம் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகம்!

சர்வதேச சுற்றுலாத்தலமான மாமல்லபுரம் பகுதியில் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் என இரண்டு அருங்காட்சியகம் அமைக்கப்போவதாகக 2013-ல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் அறிவித்தது. இதையடுத்து 8 கோடி ரூபாய் மதிப்பில் கடற்கரை பகுதியில் நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சிகத் திட்டத்தைத் தொடங்கினர். இதற்கான பணிகளைத் தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டது. திட்டத்தில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியாமல் கைவிட்டனர்.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்

உலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா?

அதுபோல் கடல்வாழ் உயிரின அருங்காட்சியகத் திட்டமும் தொடங்கப்படுவதற்கான அறிகுறியே தென்படவில்லை. இதற்காக 13.07 ஏக்கர் பரப்பளவில் 258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. திட்ட அறிக்கை தயாரிப்பதற்கும் ஆலோசனைக்காகவும் 2.50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையில் எந்தப் பணியும் இன்னும் தொடங்கப்படவில்லை. அருங்காட்சியகம் அமைத்து முதல் மூன்றாண்டுகளுக்கு அதைப் பராமரிக்க 30 கோடி ரூபாய் வட்டியின்றி கடனாகக் கொடுப்பதாகத் தமிழக அரசு அறிவித்தது. ஆனாலும், தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் எடுக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. நிலையான அரசு இல்லாததால் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அப்போது திட்டத்தில் மாறுதல்களோ வேறுவகையில் சிக்கல்களோ உருவாகலாம் என்பதால் இந்தத் திட்டத்துக்கு ஒப்பந்தம் கோர தனியார் நிறுவனங்கள் முன்வருவதில்லை என்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும் இதற்கான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்போது, அக்ரிலிக் கண்ணாடி சுரங்கத்தின் மூலம் கடல்வாழ் உயிரினங்களை மிக அருகில் காணமுடியும். கடலுக்கடியில் உணவகங்கள், கல்வி அரங்கம், லேசர் காட்சியகம், இசை நீரூற்று எனப் பல்வேறு வசதிகள் கொண்ட சுற்றுலாத்தலமாக அமையும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: