கோவில், மசூதி, தேவாலயங்களில் கட்டப்பஞ்சாயத்து : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

கோவில், மசூதி, தேவாலயங்களில் கட்டப்பஞ்சாயத்து : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

கோவில், மசூதி, தேவாலயங்களில் கட்டப்பஞ்சாயத்து : நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு!

‘வழிபாட்டு தலங்களில் பிரார்த்தனை தவிர்த்து, பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பெரியமேட்டைச் சேர்ந்த அப்துர் ரகுமான் தாக்கல் செய்த மனு: சென்னை, அண்ணாசாலையில், ‘மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சில்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது. மசூதி வளாகத்தை பயன்படுத்தி, நீதிமன்றம் போல இயங்குகிறது; ஆனால், கட்டப் பஞ்சாயத்து நடக்கிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பாக, அளிக்கப்படும் புகார்களுக்கு ஆஜராகும்படி, ‘சம்மன்’ அனுப்புகின்றனர். அதன்பின், அவர்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப, உத்தரவுகளை பிறப்பிக்கின்றனர். என் குடும்ப பிரச்னைக்காக, இந்த ஷரியத் கவுன்சிலை அணுகினேன். மனைவியுடன் சேர்த்து வைக்க கோரினேன். ஆனால், அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்து, மனைவியை விவாகரத்து செய்வதாக, கையெழுத்து போடும்படி என்னை வற்புறுத்தினர். பின், விவாகரத்து செய்ததாக அறிவித்தனர். ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கணக்கான வழக்குகளை, இந்த ஷரியத் கவுன்சில் கையாளுகிறது. ஷரியத் சட்டத்தை, இவர்கள் பின்பற்றுவதில்லை. சட்ட விரோதமாக இந்த கவுன்சில் செயல்படுவதால், முஸ்லிம் குடும்பங்களின் அமைப்பு சீர்குலைந்துள்ளது. எனவே, சென்னை, அண்ணா சாலை, மக்கா மஸ்ஜித் ஷரியத் கவுன்சில் மற்றும் இதுபோல் தமிழகத்தில் செயல்படும் அமைப்புகளின் நடவடிக்கையை நிறுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சுந்தரம் அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிராஜுதீன் ஆஜரானார். போலீஸ் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்.  இணைய இங்கு அழுத்தவும்….


முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு: ஆவணங்களை பார்க்கும் போது, ஷரியத் முடிவு போல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; ஆவணங்களில், ஷரியத் கவுன்சிலின் நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், வழக்கு எண், கோப்பு எண், புகார் கொடுத்தவர்கள், எதிர் தரப்பில் உள்ளவர்கள், முடிவு அறிவித்த தேதி என, விபரங்கள் உள்ளன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு, நீதிமன்றத்தின் சாயம் பூசப்பட்டுள்ளது; மசூதிக்குள் இந்த நடவடிக்கைகள் இருப்பதால், அதை நிறுத்துவது கடினம் என, அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியவில்லை. கோவில், மசூதி, தேவாலயம் என, வழிபாட்டு தலங்கள் எதுவாக இருந்தாலும், அங்கு பிரார்த்தனை, வழிபாடுகள் தவிர்த்து, வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, பஞ்சாயத்து நடவடிக்கைகளை நிறுத்த, அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, நான்கு வாரங்களில், மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை வரும் ஜன., 19க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: