தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா?

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகச் சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாகத் தமிழக அறநிலையத்துறை பதில் அளிக்க மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் கட்டுப்பாட்டின் கீழ் தஞ்சை பெரிய கோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், தாராசுரம் ஐராதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 88 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களிலிருந்து தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்கு ஏராளமான வருமானம் கிடைக்கிறது.

ஆனால், இந்தப் பணம் இக்கோயில்களின் பாரமரிப்புக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் இதில் முறைகேடுகள் நடைபெறுவதாகத் தஞ்சை பெரிய கோயில் உரிமை மீட்புக் குழுவினர் குற்றம் சாட்டி வந்தனர். மேலும், இக்கோயில்களுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான நிலங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தார்கள்.

இந்நிலையில்தான் தமிழக திருத்தொண்டர் சபை என்ற அமைப்பின் நிறுவனர் ராதாகிருஷ்ணன் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள தஞ்சை பெரியகோயில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்குச் சொந்தமான 1,000 ஏக்கர் நிலங்கள் தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளன. இந்த நிலங்கள் தனியார் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறை உட்பட அனைத்து துறைகளும் சேர்ந்து நில தணிக்கை செய்து நிலங்களை மீட்க வேண்டும். இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதில் அளிக்க அறநிலையத்துறைக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: 

Leave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்: